200 மீட்டர் போட்டியில் உசேன் போல்டை விழ வைத்த கேமிரா மேன் !

15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் பீஜிங் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் அரங்கேறியது.  200 மீட்டர் போட்டியில் உசேன் போல்டை விழ வைத்த கேமிரா மேன் !
இதில் நடப்பு சாம்பியனான ஜமைக்காவின் உசேன் போல்ட், அவருக்கு சவாலாக திகழும் அமெரிக்காவின் ஜஸ்டின் கேத்லின் உள்பட 8 பேர் பதக்கத்துக்கான இறுதி சுற்றில் களம் கண்டனர். 

புன்னகை ததும்ப களம் புகுந்த உசேன் போல்ட் குறுகிய தூர ஒட்டப்பந்தயத்தின் முடிசூடா மன்னன் தான் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லினை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட உசேன்போல்ட், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார். 

200 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற உசேன்போல்ட் கடைசி வரை அதனை தக்க வைத்து கொண்டார்.

உசேன் போல்ட் 19.55 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தக்க வைத்தார். பந்தய தூரத்தை கடந்த் பிறகு உசேன் போல்ட் வெற்றி பெருமிதத்துடன் நடந்து வந்து கொண்டு இருந்தார். 

இந்த காட்சியை சீனாவை சேர்ந்த டிவி கேமிராமேன் வந்த செக்வே வண்டியின் சக்கரம் ஒன்று தடிப்பில் மோதி திடீர் என நிலை தடுமாயது இதில் கேமிராமேன் தரையில் விழுந்தார். 

வண்டி உசேன் போல்ட்டின் கால்களில் மோதி அவரும் கீழே விழுந்தார். பின்னர் சுதாரித்து கொண்டு உசேன் போல்ட் எழுந்து என்றார் கேமிரா மேனை பாதுகாவலர்கள் தூக்கி விட்டனர். 
200 மீட்டர் போட்டியில் உசேன் போல்டை விழ வைத்த கேமிரா மேன் !
29 வயதான உசேன்போல்ட் உலக போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் 2009, 2011, 2013-ம் ஆண்டுகளிலும் தங்கப்பதக்கம் வென்று இருக்கிறார். 

அத்துடன் 2009, 2013-ம் ஆண்டுகளில் 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 
உலக போட்டியில் உசேன் போல்ட் வென்ற 10-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 2008 மற்றும் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தலா 3 தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings