கார்ட்டூனை தொலைக்காட்சி பெட்டிக்கு கொண்டு வந்தது !

எதற்காக கொண்டு வந்தார்கள்..? குழந்தைகள், சிறு பிள்ளைகள் ஆடல், பாடல், காதல் போன்றவை கலந்த சினிமாவை பார்த்து கெட்டு போக கூடாது.
கார்ட்டூனை தொலைக்காட்சி பெட்டிக்கு கொண்டு வந்தது !
இவர்களுக்கான பொழுது போக்கை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்.. வெளிப்படையாக பார்த்தால் இது ஓர் நல்ல எண்ணத் திலான முயற்சி என்பது போல் தோன்றும்.

ஆனால் கார்ட்டூனை உலக அளவில் பொழுது போக்காக கொண்டு வந்த இஸ்ரேலி யர்கள் தங்கள் பிள்ளை களுக்கு அதை காட்ட மாட்டார்களாம்..

ஏன் தெரியுமா..? இதுபோன்ற ஒரு கேலி சித்திரங்களை பார்த்து வளரும் குழந்தைகள், உலகை பொழுது போக்காக கழிக்கவே ஆசை படுவார்கள்...

ஓர் முறையான லட்சியமோ, மார்க்க சிந்தனைகளோ, அப்பிள்ளை களிடம் இருக்காது.. 

ஆக்கப் பூர்வமான செயல் பாடுகள் அனைத்தும் அப்பிள்ளை களுக்கு வெறுப்பாகவே தோன்றும். வளர்ந்த பிறகு சிலர் மட்டுமே இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்..

இன்னும் சொல்லப் போனால், இந்த கார்ட்டூன் மூலமாகவும் காதல், வன்முறை போன்ற எண்ணங் களையும், பிள்ளைகள் நெஞ்சில் விதைக் கின்றது..

முன்பெல்லாம் பெரியோர்கள் குழந்தைகளுக்கு திக்ருகளை சொல்லிக் கொடுத்து, சொல்ல வைத்து பார்த்து மகிழ்ச்சி காண்பார்கள்..
இன்று பவர் ரேஞ்சர்ஸ் பார்த்து விட்டு அதில் வரும் வசனங்களை வரி தவறாமல் சொல்லிக் கொண்டு, சண்டை போடும் பிள்ளைகளை தான் அதிகம் பார்க்க முடிகிறது.

அரபுகளை கொள்ளையர் களாகவும், அவர்களை மாற்று மத கடவுள்கள் எதிர்ப்பது போன்ற காட்சிகளின் மூலம், மத துவேஷத்தை வளர்க்கும் சோட்டா பீம், இலுமினாட்டி போன்ற கார்ட்டூன்கள் குறிப்பிடத் தக்கது..

இதுப் போன்ற வற்றை கண்டிப்பாக பிள்ளை களுக்கு காட்டாதீர்கள்.. கார்ட்டூன் பார்க்காமல் வளரும் பிள்ளைகள் சிறுவயதி லிருந்தே விவரமா கவும் புத்திசா லியாகவும், வளரும்..

வயதுக்கு மீறிய புத்திசாலி தனத்தோடு அவன் பேசுவதை கண் கூடாக பார்க்கலாம். எனவே சகோதர சகோதரிகளே.. உங்கள் பிள்ளை களை அர்த்தமற்ற பொழுது போக்கின் நிழலில் வளர்க் காதீர்கள்.

சினிமா போன்ற வற்றை காண்பித்து பிஞ்சு மனதில் நாசமான செயல்களை பதிக்காதீர்கள். கார்ட்டூன் வைத்தால் தான் சாப்பிடுவேன் என்று சொல்லும் அளவுக்கு அவனை அடிமையாக்கி விடாதீர்கள்.

ஒரு வயது குழந்தையி லிருந்தே குர்ஆன் கிராத், மக்கா மதினாவை காட்டும் சேனல்கள் அல்லது சீ.டிக்கள், பயான்,போன்ற ஆக்கப் பூர்வமான, நன்மை யான விஷயங்களை அவனுடைய பொழுது போக்காக மாற்றுங்கள்.
குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அக்குழந்தை சுற்றி நடப்ப வற்றை கவனிக்க ஆரம்பித்து விடுமாம்..

நடப்பவை என்ன வென்று அந்த வயதில் புரியா விட்டாலும் அனைத் தையும் கவனிப்பதால் அதன் மனதில் பதியப்பட்டு விடுமாம்..

எனவே மூன்று மாத குழந்தையி லிருந்தே அவன் கண்ணில் படுகின்ற, காதால் கேட்கின்ற அனைத்தும், சரியான தாக இருக்கட்டும்..

அதற்கு ஆக்கப் பூர்வமான மார்க்கம் சார்ந்த விஷயங்களை அவனை சுற்றியுள்ள சூழ்நிலை யாக மாற் றுங்கள்..

அவ்வாறு செய்தால் அவன் உலகத்தை அர்த்த முள்ள விதத்தில் கழிக்க பார்ப்பான். உங்கள் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குறிப்பாக பெண்கள் தான் இந்த பொறுப்பில் அதிக அக்கரை எடுத்து செயல்பட வேண்டும்.

வெளியூரில் இருக்கும் சகோதரர்கள் வீட்டிற்கு பேசும் பொழுது இதனை கண்டிப்பாக நினைவு படுத்துங்கள்.
Tags:
Privacy and cookie settings