நீரானது நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடை வெளிகளில் கிளர்ந் தெழுந்து, மேல் நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப் படுவது வெந்நீர் ஊற்று எனப்படுகிறது.
 


வெந்நீர் ஊற்றின் தோற்றத்திற்கு, உயர் வெப்பநிலை, நிலத்தடி நீர், நிலத் தினடியில் இருந்து மேற் பரப்பை நோக்கி வரும் குழாய் போன்ற அமைப்பு ஆகிய மூன்று நிலவியல் நிலைமைகள் மிகு தேவையாகின்றன.

ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீர் ஊற்றுகள் இருப்பதால்,  இது ஒரு அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.

பொதுவாக இவை எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அருகாமை யிலேயே தோன்றியிருக்கும். நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத் தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறை களைத் தொட்டுச் செல்லும்.

அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீர், சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற் பாட்டினால் இந்த வெந்நீர் ஊற்றுகள் உருவாகின்றன.

உலகில் இருக்கும் கிட்டத்தட்ட 1000 வெந்நீர் ஊற்றுகளில் பாதிக்கும் மேல் அமெரிக் காவிலுள்ள வயோமிங் என்னும் இடத்தில் இருப்பதாக அறியப் படுகிறது. ஒரு வெந்நீர் ஊற்றின் வாழ்வுக் காலம், சில ஆயிரம் ஆண்டுகள் மட்டுமே