இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !

அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள். மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள்.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. 
அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன். 

அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.

இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது? அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள்.

தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டி யிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப் பட்டது. 

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப் படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. 

கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார். ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர். 
அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள். அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. 

அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி. அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். 

விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம் தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப் பட்டனர். 

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். 

அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்தது தான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். 

இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். 

(nextPage)

பூமிக்குள் ஓர் கள்ள தேசம்
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப் போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான் குட்டிகள் தான்,

அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது.

சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது.

எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. 
அபகரிக்கவேத் தொடங்கினர். முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவு படுத்துவதை பிரிட்டன் ஊக்கப் படுத்தியது.

காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் - அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது.

பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது. பாலஸ்தீனத்திற் குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. 

பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போது தான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர்.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது.

ஹெப்ரான் படுகொலை என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான். 1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர்.

அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன.
கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்? பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது.

கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகி வரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பது தான் தீர்வாகும்.

எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.

இந்த நிலையில் தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக் கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.

ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது.

அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது. 1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது.

அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும்.

அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல். ‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்க வில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமி தான். அது தான் நாடு. 
அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப் படவில்லை.
(nextPage)
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர்

இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர்.
உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின.

இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.

ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.
1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப் பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகி யிருக்கின்றனர்.

ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதை அற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்து விட்டது. 

அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது. 

ஒரு நாடாக அறிவிக்கப் படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. 

இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது. பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. 

அப்போது தான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன. அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. 
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமி தான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்தி லிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர்.

அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்கா தான்.

தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில் தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது.
கோதுமை இனிப்பு கொழுக்கட்டை
1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது. 1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. 

எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். 

அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார்.

இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். 

ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன. ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. 

எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர்.
(nextPage)
ஆயுதம் என்ன தெரியுமா?
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.

1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது.

அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப் பணிகளையும் மேற்கொண்டது.
பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 

1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியா விட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது. 

அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். 
பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பி லிருந்து மீட்க 
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள். மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். 

அங்கே ஒரு நாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை. 2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. 

தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன.

அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப் படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்க வில்லை.
தங்கள் தாயகத்தின் இதயப் பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப் பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது. 

எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது.
(nextPage)
ஈவிரக்கமற்ற இஸ்ரேல்

ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத் தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணிய வில்லை. மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. 

ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது. 

முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள் தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன.
இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.

இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.

ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள்.
இஸ்ரேல் உருவானது இப்படித்தான்.. ஒரு ஆய்வு பார்வை !
ஆனால் பலவகையிலும் திமிர் பிடித்து அந்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள். 

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது.
அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி.

எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும். வலல ரஹ்மான் பாலஸ்தீனிய மாக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக.
Tags: