உணவு என்று சொன்னாலே போதும் நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். அதுவும் குறிப்பாக நம் நாட்டு உணவு என்றால் கேட்கவா வேண்டும். இந்திய உணவு என்று சொன்ன வுடன், 

 ஆரோக்கியமான உணவு


முதலில் நினைவுக்கு வருவது - காரம், மசாலா, எண்ணெய், கொழுப்பு மற்றும் ருசி. இந்திய உணவுகள் புகழ் பெற்றதாக இருந்தாலும், அதனை பற்றி நம்மில் பல பேரிடம் தவறாக புரிதலே நிலவுகிறது. இந்திய உணவு களில் பல வகையான மசாலா பொருட்கள் சேர்க்கப் படுகின்றன. 

அதனால் பல வகைகளில் உடலுக்கு ஊட்டச் சத்தை அளித்து வருகிறது. இந்திய உணவு வகைகளில் கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் இதர ஊட்டச் சத்துக்கள் நிறைந் துள்ளதால், அவை சரிசமமான உணவாக விளங்கும். 

இந்திய உணவுகளில் எந்த வகை உணவுகள் உடல் எடையை அதிகரிக் காமல், உடலை ஆரோக்கி யத்தோடு வைக்க உதவுகிறது என்பதை அறிய வேண்டாமா?

அப்படி யானால் கீழ்கூறிய 20 வகை இந்திய உணவு களைப் பற்றி அறிந்து கொண்டு ஆரோக்கி யத்துடன் இருங்கள்.

மோர் 

மோரில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், அதில் வெண்ணெய் என்பதே கிடையாது. அதனால் அதில் கொழுப்பின் அளவும் குறைவாகவே இருக்கும்.

குறைவான கொழுப்பளவு உள்ள பாலில் இருந்து எடுத்த ஒரு கப் மோரில், தோராயமாக 100 கலோரிகளும், 2 கிராம் கொழுப்பும் உள்ளது.

பருப்பு சாம்பார் 

காய்கறிகள், பட்டாணி, பருப்பு மற்றும் இதர மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப் படுவது தான் சாம்பார்.

பருப்பு சாம்பார்


ஒரு முறை சாப்பிடும் அளவில் 20 கலோரிகள், 2.6 கிராம் கார்போ ஹைட்ரேட், 15.0 கிராம் புரதச்சத்து மற்றும் 1.8 கிராம் கொழுப்பு அடங்கி யுள்ளது.


தந்தூரி சிக்கன் 

தயிர், தந்தூரி மசாலா மற்றும் இதர மசாலாக் களுடன் சிக்கனை ஊற வைத்து செய்யப் படுவதே தந்தூரி சிக்கன்.

தந்தூரி சிக்கன்

ஒரு கால் துண்டு தந்தூரி சிக்கனில் தோராயமாக 260 கலோரிகள், 13.0 கிராம் கொழுப்பு, 5.0 கிராம் கார்போ ஹைட்ரேட் மற்றும் 30.5 கிராம் புரதம் அடங் கியுள்ளது.

ராஜ்மா 

ராஜ்மா என்பது சிவப்பு காராமணியை வைத்து தயாரிக்கப் படும் குழம்பு வகையாகும். வட இந்திய உணவான இது மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப் படுபவை.

ராஜ்மா

இதனை சாதம் அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். 114 கிராம் அளவிலான ராஜ்மாவில், 120 கலோரிகள் மற்றும் 5 கிராம் புரதமும் அடங்கி யுள்ளது.

ஹர பர கபாப் 

மொறு மொறுவென்று இருக்கும் ஹர பர கபாப் என்பது ஒரு சைவ உணவாகும். மணக்கும் மசாலா பொருட்கள் மற்றும்

ஹர பர கபாப்


ஆரோக்கிய மான இதர பொருட்களும் சேர்த்து தயாரிக்கப் படும் இது மிகுந்த ருசியுடன் இருக்கும். ஒரு முறை உண்ணும் அளவில் 73 கலோரிகளும், 2 கிராம் புரதமும் உள்ளது.

அர்ஹார் பருப்பு 

பீன்சை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை தான் அர்ஹார் பருப்பாகும். ஆரோக்கிய மான இந்த உணவை ஒரு முறை சாப்பிட்டால்,

அர்ஹார் பருப்பு

தோராயமாக 53 கலோரிகள், 1.2 கிராம் கொழுப்பு, 8.0 கார்போ ஹைட்ரேட் மற்றும் 2.8 கிராம் புரதமும் அடங்கி யுள்ளது.

வெண்டைக்காய் சப்ஜி 

இந்த எளிமை யான உணவை சப்பாத்தி மற்றும் பரோட்டா வுடன் சேர்த்து உண்ணும் போது, ஒரு அலாதியான சைவ உணவை உண்ட திருப்தி கிடைக்கும்.

வெண்டைக்காய் சப்ஜி

50 கிராம் மதிப்பிலான இந்த உணவில் தோராயமாக 80 கலோரிகளும், 5 கிராம் புரதமும் உள்ளது.

சோல்கதி 

சிவப்பு நிறத்தில் உள்ள சோல்கதி என்பது ஒரு பசியூக்கி பானமாகும். இது கோக்கும் பழம் (Kokum fruit) மற்றும் தேங்காய் பாலை வைத்து தயாரிக்கப் படுகிறது.

சோல்கதி

காரசாரமான உணவை அருந்திய பின், இதை பருகினால் வயிற்றுக்கு மிகவும் நல்லதாகும். ஒரு டம்ளர் சோல்கதியில் 138 கலோரிகள் உள்ளது.

கொண்டைக்கடலை மற்றும் கீரை குழம்பு 

ஏதாவது ஒரு நற்பதமுள்ள கீரை வகையை கொண்டைக்கடலையுடன் சேர்த்து தயாரிக்கப்படுவது தான் இந்த பச்சை நிற உணவு. நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த உணவை ஒரு முறை சாப்பிட்டால், 142 கலோரிகள் கிடைக்கும்.

கொண்டைக்கடலை மற்றும் கீரை குழம்பு

ரைத்தா 

பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை கடைந்த தயிருடன் சேர்த்து எளிய முறையில் தயாரிக்கப்படும் உணவு தான் ரைத்தா. ஒரு முறை எடுத்துக் கொள்ளும் அளவில் தோராயமாக 60 கலோரிகள் இருக்கிறது.

ரைத்தா

லோபியா 

லோபியா என்பது ஒரு புகழ் பெற்ற வட இந்திய உணவு வகையாகும். ஊற வைத்த தட்டைபயறை, அரைத்த தக்காளியுடன், மசாலா பொருட்கள் சேர்த்து கொதிக்க விட்டு, இந்த உணவு தயார் செய்யப்படுகிறது. ஒரு முறை உண்ணும் அளவில் 198 கலோரிகள் உள்ளது. 

லோபியா


பாலக்-டா-சாக் 

பசலைக் கீரையில் செய்யப்படும் ஒரு புகழ் பெற்ற பஞ்சாபி உணவு வகை தான் பாலக்-டா-சாக். இதனை ரொட்டி அல்லது நாணுடன் சாப்பிடலாம்.

பாலக்-டா-சாக்

ஒரு முறை உண்ணும் அளவில் தோராயமாக 126.2 கலோரிகளும், 6.3 கிராம் புரதமும் உள்ளது.

டலியா 

பல்குர் கோதுமை யிலிருந்து செய்யப்படும் டலியா எனப்படும் உணவு ஆரோக்கிய மானதாகும். இதனை காலை உணவாக உண்ணலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால்,

டலியா

ஆரோக்கிய மான செரிமான த்திற்கும் உறுதுணை யாக இருக்கும். 170 கிராம் முழு கோதுமை டலியாவில், தோராயமாக 85 கலோரிகள் உள்ளது.

ஆலு பாலக் 

மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக நறுக்கிய பசலை கீரையை கலந்து செய்ய ப்படுவது தான் ஆலு பாலக். இதனோடு பிற காய்கறி களையும் தேவைகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

ஆலு பாலக்

142 கிராம் அளவிலான இந்த உணவில், 100 கலோரிகளும், 2 கிராம் புரதமும் உள்ளது.

பாசிப்பருப்பு பாஜி 

முளைத்த பாசிப் பருப்பை வைத்து செய்யப்படும் பாஜியை வேகமாகவும், சுலபமாகவும் செய்து முடிக்கலாம். இது ஆரோக்கிய மான உணவாக விளங்குகிறது.
பாசிப்பருப்பு பாஜி


பொதுவாக முளைத்த பயிர்களில் அதிக அளவு புரதம் உள்ளதால், உடல் ஆரோக்கி யத்திற்கு மிகவும் நல்லது. ஒரு முறை எடுத்துக் கொள்ளும் அளவில், 125 கலோரிகள் மற்றும் 4 கிராம் கொழுப்பு அடங்கி யுள்ளது.

பைகன் பர்தா 

இது நன்கு வதக்கிய கத்திரிக்காயை வைத்து சுலபமாக செய்யப்படும் வட இந்திய உணவு வகையாகும். 100 கிராம் அளவிலான உணவில் தோராயமாக 102 கலோரிகளும், 5 கிராம் கொழுப்பும் உள்ளது.

பைகன் பர்தா

சிவப்பு பூசணிக்காய் பாஜி 

மிகவும் ருசியுடன் இருக்கும் இந்த உணவை சப்பாத்தி, புல்கா அல்லது ரொட்டியுடன் உண்ணலாம். சாதத்துடனும் கூட இதை ருசித்து சாப்பிடலாம். இத ஒரு முறை சாப்பிடும் போது தோராயமாக 151 கலோரிகள் அடங்கி யுள்ளது.

>சிவப்பு பூசணிக்காய் பாஜி

காலிஃப்ளவர் பாஜி 

புகழ் பெற்ற மகாராஷ்ட்ரா உணவு வகையான இதனை தக்காளி மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து விதவிதமாக சமைக்கலாம். ஒரு முறை உண்ணும் அளவில், 65 கலோரிகளும், 2.2 கிராம் புரதமும் அடங்கியுள்ளது.

காலிஃப்ளவர் பாஜி

பட்ராணி மீன் 

மசாலா தடவிய மீனை வாழை இலையினுள் வைத்து வேக வைப்பதே இந்த உணவாகும். ஒரு முறை உண்ணும் அளவில் 290.3 கலோரிகளும், 13.6 கிராம் கொழுப்பும் அடங்கியுள்ளது.

பட்ராணி மீன்சிக்கன் தன்சக் 

புகழ் பெற்ற இந்த பார்சி உணவானது, சிக்கனை வைத்து செய்யப்படும் ருசி மிகுந்த உணவாகும்.

சிக்கன் தன்சக்

இதனை பாரம்பரிய முறைபடி பழுப்பு நிற சாதம் மற்றும் கச்சும்பர் சாலட்டுடன் சேர்த்து பரிமாறப்படும். ஒரு முறை உண்ணும் அளவில் தோராயமாக 505 கலோரிகள் உள்ளது.