பிள்ளைப் பெற்றால் 3,58,000 வழங்கப்படும்.. போர்த்துக்கல் !

போர்த்துக்கல் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு ரூ. 3,58,000 பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அறிவித்துள்ளது.
பிள்ளைப் பெற்றால் 3,58,000 வழங்கப்படும்.. போர்த்துக்கல் !
சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி போர்ச்சுக்கல் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் நிலையும் ஏற்படுகிறது.

மேலும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள மறுப்பதால் அங்கு பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

அதிலும் அல்கோடிம் என்ற கிராமத்தில் 0.9 என்ற மிகவும் குறைவான அளவிலேயே பிறப்பு விகிதம் உள்ளது. அங்கு கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு அந்தக் கிராமத்தில் உள்ள தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், 5 ஆயிரம் யூரோ பரிசு வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பிறப்பு விகிதம் நிச்சயம் கூடிவிடும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings