சிறைகளில், போலீஸ் நிலையங்களில் , லாக்அப் அறைகளில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் , மாநில அரசுகள் மேற்கூறிய இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்து மாநில அரசுகளும் மனித உரிமை கமிஷன் நிர்வாகத்தில் காலியாக கிடக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் 2 பெண் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
உத்தரவுக்கு வரவேற்பு :
இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு காமிரா பொருத்தப்படும் போது , லாக்அப் மரணங்கள் குறையுவும் வாய்ப்பு இருக்கிறது என கருத்து தெரிவிக்கின்றனர்