வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளி நாட்டவர்கள் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ண ப்பிக்கலாம். 

இது குறித்து துபாய் ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டு விவாகரத்துறை இயக்குநகர கத்தின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:–
அமீரக விசா ஓமன்
உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசித்து வரும் வெளிநாட்டவர்கள் அந்தந்த நாடுகளின் விசாக்கள் பெற்று பணிபுரிந்து வந்தால் அமீரக விசா பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் வளைகுடாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர் அமீரக விசா பெறும் நடைமுறை மிகவும் எளிதாகிறது. இதன் மூலம் விமான நிலையங்களில் விசா பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதன் மூலம் வணிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமீரகம் வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி மிகவும் எளிதானதாகவும், வசதியானதாகவும் இருக்கும்.
இந்த புதிய வசதியின் மூலம் விசா பெற விண்ணப்பிக்க விரும்புவோர் ரெசிடென்சி துறையின் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.