திருவட்டார் அருகே பூட்டிய வீட்டுக்குள் காதல்ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வருவதாக பொதுமக்கள் கூறியதால் அவர்கள் தப்பிஓடினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம்  சதிருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் செநதில்(39 பெயர் மாற்றம்). கொத்தனார் .இவருக்கு திருணமாகி 15ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. 

இவரது மனைவிக்கும், மதபோதகர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் மத போதகருடன், செநதில்  மனைவி ஓட்டம் பிடித்தார். அதைத் தொடர்ந்து தனிமையில் வாழ்ந்து வந்த செந்தில், தனக்கு ஒரு துணை தேட தொடங்கினார். 

அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, திருவட்டார் ஆணையடி பகுதியை சேர்ந்த கணவரை இழந்து, ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்த பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டார்.

கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வந்ததால், அடிக்கடி ஊருக்கு சென்று வருவதில் செந்திலுக்கு பெரும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் அங்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார். 

இந்த தகவலை மனைவியிடம் கூறியவர், உடனே புறப்பட்டு வருமாறு கூறினார். அவரும் புறப்படுவதற்கு தயாரானார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன், அவரது தம்பி ராஜேஷ்( பெயர்மாற்றம்)கேரளாவுக்கு பஸ்சில் அனுப்பி வைத்தார். 

அக்கா கேரளாவுக்கு குடி பெயர்ந்து விட்டதால் ,தனது காதலியை அழைத்துக் கொண்டு அக்காவின் வீட்டுக்கு வந்தார் ராஜேஷ். அக்கம் பக்கத்தினர் இந்த பெண் யார் என விசாரித்த போது, அலட்சியமாக பேசி இருக்கிறார்.

பின்னர் காதலியுடன் அக்காவின் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இருவரும் உல்லாசமாக இருந்தனர். நீண்டநேரம் ஆகியும் இருவரும் வெளியே வரவில்லை. பொதுமக்கள் பிரச்னை செய்தும் அவர்கள் கண்டு ெகாள்ளவில்லை. 

போலீஸ் வருவதாக பொதுமக்கள் கூறியதால், பயந்து போன காதல் ஜோடி கதவை திறந்து வெளியே வந்தனர். இருவரும் அரைகுறை ஆடையுடன் வெளியே வருவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

அவர்களை சிறைபிடித்த பொதுமக்கள் போலீசுக்கு போன் செய்யுங்கள் என்று பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசினர். இதனால் கண்டிப்பாக பிரச்னை பெரிதாகி விடும் என்று நினைத்த ராஜேஷ் அங்கிருந்து புறப்பட தயாரானார். 

நிலைமைைய உணர்ந்து கொண்டவர் அவசரம் அவசரமா ககாதலியை அழைத்துக் கொண்டு, பைக்கில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவத்தால் திருவட்டார் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.