ஜார்கண்ட்டில் மத்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுரங்க ஊழியர்களின் 30க்கும் மேற்பட்ட வாகனங்களை மாவோயிஸ்டுகள் தீயிட்டு கொளுத்தினர்.
ஜார்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் மெர்மோ பகுதியில் மத்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது.
சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தவர்களின் 30 பேருக்கும் மேற்பட்டோரின் வாகனங்களை மாவோயிஸ்டுகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தீவைத்து கொளுத்தினர்.
பின்னர் நிறுவனத்திற்குள் புகுந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களை அடித்து விரட்டி அடித்து அங்கிருந்த வாகனங்களையும் எரித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.