துருக்கியின் போராட்டத்தால் சீனா கொள்கை மாற்றம் !

உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு அந்த பகுதியில் உள்ள முஸ்லிம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ரமளான் காலத்தில் நோன்பு வைப்பதர்கு தடை விதித்திருக்கிறது.

uyigur

இது முஸ்லிம்கள் இடையே மிகபெரிய சீற்றத்தை உருவாக்கியது. உய்கூர் முஸ்லிம்களுக்கு ஆதராவாக சீன அரசை கண்டித்து துருக்கி முஸ்லிம்கள் மிக பெரிய கண்டன ஆர்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

துருக்கியில் சீன அரசுக்கு எதிராக எழுந்துள்ள கோபம் சீன அரசை கவலை கொள்ள செய்திருப்பதாக சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹீவாசோங்யங் நேற்று சீன தலை நகர் பெய்ஜிங் இல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது சீனாவில் அனைத்து மதத்தவர்களும் அவரவர் மதசுதந்திரத்தை பெற்று வாழ்ந்து வருவதாக கூறிய அவர் சீனா எந்த மதத்திர்கும் எதிரான நாடு அல்ல என்றும் தெரிவித்தார்.

சீனாவில் 56 வகையான மத சிறுபான்மையினர் வாழ்நது வருவதாக கூறிய அவர் இதில் 10 வகையினர் முஸ்லிம் சிறுபாண்மையினர் எனவும் குறிப்பிட்டார்.

இதில் தத்தாரி முஸ்லிம்கள் உஸ்பெக்முஸ்லிம்கள் தஜாகிஸ் முஸ்லிம்கள் ஸலார் முஸ்லிம்கள் பவான் முஸ்லிம்கள் என அனைத்து முஸ்லிம்களும் அவர்களின் மத உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றர்.

உய்கூர் முஸ்லிம்கள் வாழும் பகுதியல் உள்ள தன்னாட்சி பெற்ற அரசு அவர்களுக்கு சில இன்னல்களை வழங்கிவருகிறது இது முழுக்க முழுக்க அந்த பகுதி சார்ந்த பிரச்சனையே தவிர ஒட்டு மொத்த சீனாவின் பிரச்சனை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

உய்கூர் முஸ்லிம்களை பார்ப்பவர்கள் சீனாவில் மேலும் ஒன்பது வகை முஸ்லிம்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சீனாவில் வாழ்ந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

துருக்கி முஸ்லிம்கள் சீனர்களுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும் என்றும் சீன நீறுவனங்களுக்கும் சீனர்களுக்கும் துருக்கி உரிய பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்றும் அவர் துருக்கி அரசை மன்றாடி கேட்டு கொண்டார்.

குறிப்பிட்ட சில குறைகளை தவிர்த்து ஜிங்ஜியாங் பகுதியில் 10 மில்லியன் முஸ்லிம்கள் அவர்களின் மத சுதந்திரங்களை பெற்றே வாழ்ந்துவருகின்றனர் என கூறிய அவர் மேலும் அவர்களுக்கு ஏர்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதர்கு உரிய முயர்ச்சிகள் மேர்கொள்ள படும் என்றும் தெரிவித்தார்
Tags:
Privacy and cookie settings