யாகூப் மேமன் தூக்கு கலாமுக்கு கொடிய அஞ்சலி.. ராமதாஸ் !

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை தூக்கிலிட்டது, அப்துல் கலாமின் உடல் அடக்க நாளில் கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
யாகூப் மேமன் தூக்கு கலாமுக்கு கொடிய அஞ்சலி.. ராமதாஸ் !
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப் பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டிக்கத் தக்கது. 

யாகூப் மேனனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அவரது  கடைசி மனுவை உச்ச நீதிமன்றம் ஆழ்ந்து ஆய்வு செய்திருக்க வேண்டும்.

தூக்குத் தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் அடக்க நாளில் ஒருவரை தூக்கிலிடுவது,  கலாமுக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி.
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பது தான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மது விலக்குக்கு முக்கியத்துவம்: தேர்தல் அறிக்கையை தயாரிப்பவர் மது ஆலை அதிபர் - ஆஹா.... என்ன பொருத்தம்!
Tags: