இந்தியர்கள் அரபுகளை மணந்து விட முடியுமா?

சவுதியில் வெளிநாட்டு நபர்கள் திருமணம் செய்து கொள்ள எந்த தடையும் இல்லை. பல திருமணங்கள் நடந்து அந்த ஆசிய நாட்டவரும் சவுதி குடியுரிமை பெற்றுள்ளனர்.
 ஹைதரபாத், மற்றும் கேரள முஸ்லிம்கள் பலர் சவுதி பெண்களை மணந்து சந்தோஷமாக தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.

குர்ஆனிலோ, ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சவுதி அல்லது அரபு நாட்டு பெண்களோ, அல்லது ஆண்களோ ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய ஆண்களையோ பெண்களையோ மணப்பதற்கு எந்த தடையும் இல்லை.

ஆனால் இது போன்ற திருமணங்கள் அதிகம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மொழி மற்றும் இனம் சார்ந்த வேறுபாடுகளே! ஆசிய கலாசாரத்துக்கும் ,

மொழிக்கும் அரபுகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அரபு மொழியை நன்கு பேசத் தெரிந்தவர்களே இது போன்ற திருமணங்களுக்கு ஆசைப் படுவர்.

சென்ற மாதம் கூட மும்பையைச் சார்ந்த ஒரு இளைஞருக்கு சவுதி பெண்ணை மணமுடித்துக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானிகளும் சவுதிகளும் திருமணம் செய்து கொள்வது ஆங்காங்கே அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு சவுதி நாட்டு இளைஞன் இந்திய முஸ்லிம் பெண்ணை மணந்துள்ளதை இந்த யுட்யூபில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம் பெண் எகிப்திய அரபு இளைஞனை திருமணம் செய்து கொண்டுள்ளதை இந்த யூட்யூபில் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீடியோ இதோ!
இவ்வளவு ஏன்? எனது சொந்த அத்தை மகள் ஒரு எகிப்து நாட்டு இளைஞரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றுக் கொண்டு மலேசியாவில் சந்தோஷமாக தங்கள் வாழ்வை கொண்டு செல்கின்றனர்.

ஒரு தமிழச்சியையும், ஒரு அரபியனையும் மொழி இனம் கடந்து இணைத் துள்ளது இஸ்லாம்.

எனவே அரபுகளும் இந்தியர்களும் திருமணம் செய்து கொள்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. அதிகம் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் மொழிப் பிரச்னையே தவிர சாதியோ, இனமோ காரணம் அல்ல.

2011 ஆம் ஆண்டில் மட்டும் 988 சவுதி பெண்களும், 2640 சவுதி ஆண்களும் வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டிருப்பதாக சவுதி அரசின் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டு செல்கின்றனது. அரப் ந்யூஸ் கொடுத்துள்ள செய்தியையும் இதற்கு ஆதாரமாக தருகிறேன்.

The number of Saudi women marrying citizens of other countries increased in 2011 compared to previous years, according to a Ministry of Justice report. The report showed that 1,988 Saudi women and 2,640 Saudi men married to foreigners last year.
Most of the women were in Makkah, while Riyadh came second, Eastern Province third and Al-Baha with the least number of interracial marriage.

Yemen nationals topped the list with 456 marriage contracts, followed by Kuwaitis with 351 contracts, then Qataris, Syrians, Emiratis, Egyptians, Lebanese and Pakistanis. Dr. Tawfiq Al-Suwailem of Awaser Society shared his views to Arab News on the topic.
Tags:
Privacy and cookie settings