ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்வையிட சச்சின் டெண்டுல்கர் செல்வது வழக்கம், இம்முறையும் சச்சின் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு வருகை தந்தார்.

விம்பிள்டன் டென்னிஸில் சச்சின், அஞ்சலி டெண்டுல்கர் விராட் கோலி| படம்: ட்விட்டர்.

இம்முறை இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அவரது தோழி அனுஷ்கா சர்மாவும் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்துள்ளனர்.

விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மற்றும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகியோர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நோவக் ஜோகோவிச், ரிச்சர்ட் காஸ்கே ஆகியோர் மோதும் முதல் அரையிறுதியான இந்தப் போட்டியை பார்வையிட ஓய்வு பெற்ற பிரெஞ்ச் கால்பந்து வீரர் தியரி ஹென்றியும் வந்துள்ளார்.

ரோஜர் பெடரரின் தீவிர ரசிகரான சச்சின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ரெகுலராக நேரில் சென்று பார்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.