நிலம் கையக சட்டத்தை எதிர்க்க வைகோ வலியுறுத்தல் !

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை முதல்வர்கள் மாநாட்டில் அனைத்து மாநில முதல்வர்களும் எதிர்க்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவையில் தெரிவித்தார். 
 
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நிலம் கையகப் படுத்தும் சட்ட வரைவு நாடாளு மன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. முடிவு வரும் முன்னரே, அச்சட்டத்தை பிரகட னப்படுத்த மத்திய அரசு முயற்சிக் கிறது. 

ஜூலை 15-ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறும் முதல் வர்கள் மாநாட்டில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதில், தமிழகம் உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் இச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது விவசாயிகளுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தால், விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றார். 
Tags:
Privacy and cookie settings