மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் !

40 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 4, 1975-ம் ஆண்டு சியேட்டிலில் உள்ள லேக்ஸைடு பள்ளியில் படித்து வந்த நண்பர்களான பில்கேட்ஸ், பால் ஆலன் ஆகியோர் கூட்டணியில் உருவானதே மைக்ரோசாப்ட். 
மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம் !
அப்போது பில்கேட்ஸூக்கு வயது 19, ஆலனுக்கு வயது 22. 40 ஆண்டுகால பயணத்தில் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக மைக்ரோசாப்ட் பல சாதனைகளை பதிவு செய்துள்ளது. 

அவை காலக்கோட்டின் அடிப்படையில் பின்வருமாறு:-

1975 - மைக்ரோசாப்ட் நிறுவப்பட்டது.

ஜனவரி 1, 1979 - மைக்ரோசாப்ட் அல்பெர்க்குவிலிருந்து நியூ மெக்ஸிகோ, பெலிவியூ, வாஷிங்டனுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஜூன் 25, 1981 - சட்டப்படி மைக்ரோசாப்ட் கம்பெனியாக நிறுவப்பட்டது

ஆகஸ்டு 12, 1981 - மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து 16-பிட் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பர்சனல் கம்யூட்டரை MS-DOS 1.0 ஓ.எஸ்ஸில் ஐ.பி.எம். அறிமுகப்படுத்தியது.

பிப்ரவரி 26, 1986 - மைக்ரோசாப்ட் வாஷிங்டனின் ரெட்மண்டிலுள்ள கார்ப்பரேட் கேம்பஸூக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மார்ச் 13, 1986 - மைக்ரோசாப்டின் பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது.
ஆகஸ்டு 1, 1989 - மைக்ரோசாப்ட் தனது முதல் ஆபிஸ் சூட் மென்பொருள் தொகுப்பினை வெளியிட்டது.

மே 22, 1990 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 3.0 ஓ.எஸ். வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 24, 1995 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 95 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜூன் 25, 1998 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜனவரி 13, 2000 - ஸ்டீவ் பால்மர் மைக்ரோசாப்டின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

பிப்ரவரி 17, 2000 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000 இயங்குதளத்தை வெளியிட்டது.

மே 31, 2001 - ஆபிஸ் எக்ஸ்.பி. மென்பொருட்கள் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.

அக்டோபர் 25, 2001 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்.பி. இயங்குதளத்தை வெளியிட்டது.

நவம்பர் 15, 2001 - உலகுக்கு கணிணி விளையாட்டை பரவலாக கொண்டு வர உதவிய பிரபல எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

நவம்பர் 7, 2002 - மைக்ரோசாப்ட் மற்றும் அதனது துணை நிறுவனங்கள் இணைந்து முதன்முதலில் டேப்லட் கம்யூட்டர்களை அறிமுகப்படுத்தியது.

நவம்பர் 22, 2005 - மைக்ரோசாப்ட் முந்தைய எக்ஸ் பாக்ஸ் தொகுப்பை மேம்படுத்தி Xbox 360-ஐ வெளியிட்டது.
ஜனவரி 30, 2007 - விண்டோஸ் விஸ்டா மற்றும் 2007 எம்.எஸ்.ஆபிஸ் சிஸ்டத்தை உலகம் முழுவதும் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

ஜூன் 27, 2008 - வழக்கமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி சிந்திப்பதிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்த பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையை கவனிக்க துவங்கினார்.

அக்டோபர் 22, 2009 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 இயங்குதளத்தை அறிமுகம் செய்தது.

ஜூன் 15, 2010 - ஆபிஸ் 2010 மென்பொருள் தொகுப்பை அனைவருக்கும் கிடைக்க செய்தது.

நவம்பர் 4, 2010 - மைக்ரோசாப்ட் Xbox 360 -க்காக Kinect தொகுப்பை உருவாக்கியது.

நவம்பர் 10, 2010 - விண்டோஸ் போன்களுக்காக Windows Phone 7 இயங்குதளத்தை வெளியிட்டது.

ஜூன் 28, 2011 - ஆபிஸ் 365 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது.

அக்டோபர் 13, 2011 - ஸ்கைப்-ஐ கையகப்படுத்தும் முடிவை நெருங்கியது.

அக்டோபர் 26, 2012 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 மற்றும் Microsoft Surface இயங்குதளங்களை அறிமுகப்படுத்தியது.

அக்டோபர் 29, 2012 - ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

ஜனவரி 29, 2013 - ஆபிஸ் 2013 மென்பொருள் தொகுப்பு வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 18, 2013 - Outlook.com அறிமுகமானது.
மே 21, 2013 - எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிவித்தது.

செப்டம்பர் 3, 2013 - நோக்கியாவை கையகப்படுத்தியது மைக்ரோசாப்ட்.

அக்டோபர் 17, 2013 - ஸ்மார்ட்போன்களுக்கான Windows Phone 8.1 இயங்குதளத்தை வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

அக்டோபர் 22, 2013 - Surface 2 மற்றும் Surface Pro 2 இயங்குதளங்களை அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட்

நவம்பர் 22, 2013 - எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) அறிமுகம் செய்யப்பட்டது.

பிப்ரவரி 4, 2014 - இந்தியாவை சேர்ந்த சத்தியா நாதெல்லா மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓ.வாக அறிவிக்கப்பட்டார்.

மார்ச் 27, 2014 - ஐ.பேடுக்கு ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
ஜூன் 20, 2014 - Surface Pro 3 அறிமுகம் செய்யப்பட்டது.

செப்டம்பர் 15, 2014 - Minecraft நிறுவனம் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்தது.

நவம்பர் 6, 2014 - ஆன்ட்ராய்டு டேப்லட்டுகளுக்கு Office apps -ஐ அறிவித்தது மைக்ரோசாப்ட்

நவம்பர் 21, 2015 - மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளம் வெளியீடு.
Tags:
Privacy and cookie settings