உங்கள் திறம் அறிய ஒரு சோதனை !

தொழில்நுட்ப உலகில் மல்டி டாஸ்கிங் எனும் பதம் பிரபலம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது.
உங்கள் திறம் அறிய ஒரு சோதனை !
இணையத்தில் உலாவிக் கொண்டே பின்னணியில் பாட்டுக் கேட்பது, அலுவலக சகாவுடன் உரையாடியபடி  கையில் 

செல்போனில் வாட்ஸ் ஆப் செய்திகளுக்குப் பதில் அளிப்பது தொடங்கி பல உதாரணங் களைச் சொல்லலாம். 
நம்மில் பலரும்கூட இப்படி மல்டி டாஸ்கிங் மன்னர்கள் என காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தயாராக இருக்கலாம்.  ஆனால், உண்மை யிலேயே இந்த வகை திறமை சாத்தியமா?

அதாவது ஒரே நேரத்தில் பல வேலை களைத் திறம்படச் செய்வதைத் தொழில் நுட்பம் மூலம் கைவரப் பெற்றிரு க்கிறோமா? இதற்கான பதில் மல்டி டாஸ்கிங் பிரியர்களுக்கு ஏமாற்றம் தரலாம்.
இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்வது பெரும்பாலும் பலருக்கு சாத்தியம் இல்லை என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் ஸ்டிரேயர் இந்த ஆய்வை நடத்தி யுள்ளார். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை களைச் செய்ய முடிவதாகப் பலரும் நினைக் கலாம் தான்.

ஆனால், அப்படிச் செய்யும் வேலை களின் செயல்திறன் பாதிக் காமல் இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். 
அந்த வகையில் பார்த்தால் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருப்ப தாகவும் எஞ்சிய 98 சதவீதம் பேர் ஒரு வேலை செய்து கொண்டி ருக்கும் போது வேறு வேலையைச் செய்தால்
இதயத் துடிப்பை சீராக்கி, ரத்த ஓட்டத்தை சமப்படுத்தும் ஏலக்காய் ! 
ஏதாவது ஒன்றைச் சொதப்பி விடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 2 சதவீதம் பேர்தான் சூப்பர் டாஸ்கர்கள் என வர்ணிக்கப் படுகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை இது தொடர்பான ஆய்வு நடைபெற்ற நிலையில் பேராசிரியர் ஸ்டிரேயர் மீண்டும் இந்த ஆய்வை நடத்தி யிருக்கிறார்.

பழைய ஆய்வில் பங்கேற்ற சூப்பர் டாஸ்கர் களில் 5 பேரும் மூன்று புதியவர் களும் புதிய ஆய்வில் பங்கேற் றுள்ளனர்.

இவர் களைத் தவிர மேலும் 80 பேர் தேர்வு செய்யப் பட்டனர். ஆய்வின் போது பங்கேற் பாளர்கள் திரையில் தோன்றும் கட்டத் தையும் அதில் மாறிக் கொண்டிரு க்கும் நிறத் தையும் கவனிக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஆடியோவில் கேட்கும் குறிப்பு களையும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆடியோ குறிப்பை நினைவில் நிறுத்திக் கட்டங் களின் நிலையைச் சரியாகச் சொல்ல வேண்டும்.

இந்தச் சோதனையில் 2 சதவீதம் பேர் மட்டும் திறம்படச் செயல் பட்டுள்ள னர். மற்றவர்கள் குழம்பித் தவித்துள்ளனர். 
இதற்குப் பேராசிரியர் சொல்லும் விளக்கம் பல வேலைகள் செய்யும் திறன் பெற்ற வர்களின் மூளை செயல்படும் விதம் மாறுபட்ட தாக இருக்கிறது என்பதாகும்.

சோதனையின் போது பங்கேற்பா ளர்களின் மூளைச் செயல் பாட்டை ஆய்வு செய்து இந்த முடிவை முன் வைத்துள்ளார். 

இந்தக் கருத்தைச் சோதிக்க விரும்பி னாலும் சரி அல்லது உங்கள் மல்டி டாஸ்கிங் திறனைச் சரி பார்க்க விரும்பி னாலும் சரி அதற்கு ஆன்லைன் சோதனை இருக்கிறது. 
சில்வர் பே லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்தச் சோதனை யில் ஆரம்பத்தில் ஒரு கட்டமும் தோன்றும்.

கூடவே அதில் உள்ள எழுத்துக்கான ஆடியோ பதிவு கேட்கும். இரண்டையும் நினைவில் கொள்ள வேண்டும்.
 ஆன்லைன் சோதனைக்கு: http://www.soakyourhead.com/
அடுத்ததாக இன்னொரு கட்டம் இன்னொரு எழுத்தும் தோன்றிய. அதற்கான ஆடியோ கேட்கும்.  பின்னர் முன்னர் மூன்றா வதாகத் தோன்றிய கட்டத்தில் இடம் பெறும் எழுத்தும் கேட்கும் ஒளியும்

ஏற்கனவே பார்த்ததும் கேட்டதும் தானா என உறுதிப் படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டும்.
Tags: