நோய் எதிர்ப்பு சக்தி - Immunity !

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளை விக்கும்





பாக்டீரி யாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத் தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்தி வகைகள்: 

நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

இயற்கை யான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ,

அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன.

இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக் கூடியவை.

அடுத்த படியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவை களான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத

படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல் பட்டுக் கொண்டிருக் கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி களாகும்.

தகவமை க்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity) இரண்டாவது வகையான தகவமை க்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிக ளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற் காக,

தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக் களுக்குத் தகுந்த வாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும்.

இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும் போது, இன்னொரு இடத்தி லிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிக மாக பெறுதல்.

உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப் பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிக மாக கிடைக்கிறது.

மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல் படுகிறது? 

நோய்க் கிருமிகள் நுழையும் போது, அதனை எதிர்த்து போரிடுவ தற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல் படுகிறது.

இந்த செயல் பாட்டின் போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணு யிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்து ழைப்போடு விரைந்து செயல் படுகின்றன.

நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல் பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல் படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள் களும்,

சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணை யாக இருக்கி ன்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல் படுகிறது. அதன் பெரும் பாலான செயல் பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன.

சில நேரங்களில் நோய்க் கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வி யடையும் போது தான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங் குகின்றன.





காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவை யெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடை யாளங்களே ஆகும்.

அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலை தான் காய்ச்சலாக உணரப் படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும் போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற் கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடு கின்றன.

நோய் எப்போது ஏற்படுகிறது? 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச் சத்துக் குறை வினாலும் நோய் ஏற்படு கின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறை வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

அவற்றில் சில:

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப் பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்

6. தூக்கமின்மை

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப் படுத்தி நோய் எதிர்ப் பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்க சாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலை யோரத்தில் கொட்டப் படும் காய்கறி

மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகிய வற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்கு கின்றன.




அதனால் நாம் தங்கு மிடத்தை சுகாதார மாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகி த்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.

இந்த ஒவ்வொரு செயல் பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்ற வற்றை அணியும் முன் அவை முறையாக சுத்தப் படுத்தப் பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டு மின்றி உங்களைச் சுற்றி இருப்பவர் களையும் பாதிக்கும்.

மன அழுத்த த்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சி யுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதனால் உடலில் உள்ள நச்சுத் தன்மை வெளி யேற்றப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசிய மான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது.

கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப் பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப் பட்ட டின் பொருட்கள் போன்ற வற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக் குகிறது. சர்க்கரை யின் அளவை கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.





சர்க்கரை யின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்து விடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கி னால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும்.

அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங் களோடு (Healthy life style) வாழ்வதே.
Tags: