ஹெலிகாப்டர் என்ற பயனுள்ள வானூர்தி ! #helicopter

ஹெலிகாப்டர், மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும். ஹெலிகாப்டரால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும்.
ஹெலிகாப்டர் என்ற பயனுள்ள வானூர்தி ! #helicopter
இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். ஹெலிகாப்டர் தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டு பிடிக்கபட்டு விட்டது என்பதே உண்மை.

கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக்கருவியில் ஹெலிகாப்டர் விசிறி போல இருந்த வற்றின் உதவியால் அது காற்றில் சுற்றி பறந்தது.

1483-ம் ஆண்டில், பிரபல ஓவியரான லியனார்டோ டாவின்சி, ஒரு ஹெலிகாப்டருக்கான மாதிரியை வரைந்தார். ஆனால் முதல் முறையாக 1907-ம் ஆண்டில் தான் ஹெலிகாப்டரில் வெற்றிகரமாக பறக்கபட்டது.

பிரெஞ்சு நாட்டவரான பால் கோர்னு அச்சாதனையை புரிந்தார். அவர் சுமார் 2 மீட்டர் உயரத்தில் 20 நொடிகள் பறந்தார். அடுத்து 1936-ம் ஆண்டில், இரட்டை விசிறி ஹெலிகாப்டரை ஹென்ரிக் போக்கே உருவாக்கினார்.

ரஷியாவில் பிறந்த பொறியாளரான இகோர் சிகோர்ஸ்கி, ஓர் ஒற்றை விசிறி ஹெலிகாப்டரை 1939-ல் அமெரிக்காவில் உருவாக்கினார்.

சிகோர்ஸ்கி விஎஸ்- 300 என்ற அந்த ஹெலிகாப்டர், போரில் பயன்படுத்த பட்ட முதல் ஹெலிகாப்டர் ஆகும். இன்று உலகிலேயே பெரியது, ரஷியாவின் `எம்ஐ 26′ ஹெலிகாப்டர் ஆகும்.
ஹெலிகாப்டர் என்ற பயனுள்ள வானூர்தி ! #helicopter
இதில் 20 மெட்ரிக் டன் எடையளவுக்குச் சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும். இது சாதாரண ஹெலிகாடர்களில் எடுத்துச் செல்லபடும் அளவை விட பத்து மடங்கு அதிகம். கடந்த 2005-ம் ஆண்டில் பாகிஸ்தானில் பூகம்பம் ஏற்பட்டது.

அபோது, பாதிக்கபட்ட பகுதிகளுக்கு `புல்டோசர்களை’யும், மற்ற அத்தியாவசிய பொருட்களையும் எடுத்துச் செல்ல ஐ.நா.வால் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தபட்டது.
Tags: