`செக்மேட்’ என்று சொல்வது ஏன்? | 'Checkmate', why say that?

கி.மு. 500-ல் இந்தியாவில் தோன்றிய விளையாட்டு, செஸ். இருவர் விளையாடும் இதில் இருவருக்கும் ராஜா, ராணி தவிர, காலாட்படை, குதிரை, தேர், யானை என்று 16 காய்கள் இருக்கும். 
 
ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் அவரைத் தோல்வி யடையச் செய்யலாம்.

இந்தியர்களிடம் இருந்து இந்த விளையாட்டை முதலில் கற்றுக் கொண்டவர்கள் பாரசீகர்கள்.


அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர்கள், இவ்விளை யாட்டை ஐரோப்பாவு க்குக் கொண்டு சென்றனர்.

அரசர் என்பதற்கான பாரசீகச் சொல், `ஷா’. அரேபிய `ஷாமட்’ என்பதில் இருந்து `செக்மேட்’ என்ற வார்த்தை தோன்றியது.

அதன் அர்த்தம், `அரசன் இறந்து விட்டான்’ என்பதாகும்.
Tags:
Privacy and cookie settings