ஜாக்கி சான் படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை..காத்ரீனா கைஃப்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுடன் இணைந்து நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் கூறியுள்ளார்.

 katrina

பாலிவுட்டில் ரசிகர்களின் இதயத்தை துளைத்து வெற்றிக்கொடி நாட்டிய இளம் தேவதை காத்ரீனா கைஃப் ஜாக்கிசானுடன் இணைந்து ஹாலிவுட்டில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குங்ஃபூ யோகா என்ற அந்த திரைப்படத்தை ஸ்டான்லி டாங் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில், காத்ரீனா கைஃப் சீன பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இந்திய பேராசிரியராகவும், ஜாக்கிசான் அகழ்வாராய்ச்சியாளர் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

இத்திரைப்படத்தில் நடிக்க டேக்வாண்டோ விளையாட்டின் பிராண்ட் அம்பாசிடரான பாலிவுட் நடிகை நீது சந்திராவுக்கும், காத்ரீனா கைஃபுக்கும் இடையே கடும் போட்டி எழுந்தது. முடிவில் காத்ரீனா தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை காத்ரீனா தரப்பு மறுத்துள்ளது.

ஜாக்கிசான் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று, அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதே திரைப்படத்தில் ஜாக்கிசானுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்தன.

ஆனால் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை தான் பிசியாக இருப்பதால், ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கமுடியவில்லை என்று அமீர்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings