உடலை பின்னோக்கி வளைத்து காரின் அடிப்புறத்தை கடந்த யுவதி !

அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் மிகக் குறைந்த உயரம் கொண்ட இடத்திலும், தனது உடலை பின்னோக்கி வளைத்து நகர்ந்து செல்வதில் புகழ்பெற்று விளங்குகிறார்.  
உடலை பின்னோக்கி வளைத்து காரின் அடிப்புறத்தை கடந்த யுவதி !
ஷெமிக்கா சார்ல்ஸ் எனும் இந்த யுவதியினால் ஒரு காரின் அடியில்கூட இவ்வாறு நகர்ந்து செல்ல முடியும். “லிம்போ” என அழைக்கப்படும் 
இந்த சாகசத்தில் இவர் கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.22 வயதான ஷெமிக்கா சார்ள்ஸ், 2010 ஆம் ஆண்டு எட்டரை அங்குல உயரமுள்ள 

இடத்தை கடந்து சென்றதன் மூலம் முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம் பெற்றார். அந்த சாதனையுடன் அவர் திருப்தியடைந்து விடவில்லை.

அண்மையில் கார் ஒன்றின் அடிப்புறத்தையும் கடந்து சென்று புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 
உலகில் காரின் அடிப்புற மொன்றை லிம்போ முறையில் கடந்து சென்ற முதல் நபர் இவராவார்.

அக்காருக்கு அடியில் சராசரியாக 9 அங்குல இடைவெளி இருந்த போதிலும் காரின் சில பாகங்கள் தாழ்வாக இருந்தன. 

அதனால் அதிக கவனமும் சுவாசக் கட்டுப்பாடும் தேவைப்பட்டது என ஷெமிக்கா கூறினார்.

ஷெமிக்கா சார்ல்ஸின் தாயாரும் தனது சொந்த நாடான ட்ரினிடாட் அன்ட் டுபாக்கோவில் லிம்போ நடனக் கலைஞராக விளங்கியவர். 

இவர்களின் குடும்பத்துக்குச் சொந்தமான லிம்போ நடனக் குழுவொன்றும் உள்ளது. அக்குழுவின் பாடகியாகவும் ஷெமிக்கா விளங்கினார். 
தற்போது நியூயார்க் மாநிலத்தில் வசிக்கும் ஷெமிக்கா அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சாகசங்களை நிகழ்த்தி பாராட்டுப் பெற்றவர்.
இதற்கான பயிற்சிகளுக்காக தினமும் 6 மணி நேரம் தாம் செலவிடுவதாக ஷெமிக்கா கூறுகிறார். 14 வயதில் நான் லிம்போ கலைஞராக செயற்பட ஆரம்பித்தேன்.

எனக்கு ஏதோ ஒரு விசேட திறமை உள்ளது என்பதை விரைவிலேயே நான் புரிந்து கொண்டேன். 

எனது உறவினர் ஒருவர் எனக்கு பயிற்சிகளை வழங்கினார். அதன் பின் குறுகிய காலத்தில் நான் உலக சாதனை படைத்தேன். 

இது ஓர் ஆபத்தான கலை என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது உடல் நல்ல நிலையில் உள்ளது. எனவே இப்போதைக்கு இதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்கிறார்
ஷெமிக்கா சார்ல்ஸ்.நான் உடலை பின்னோக்கி வளைத்து தாழ்வாக நகரும்போது மக்களின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதை பார்க்க நான் விரும்புகிறேன்.
பொதுவாக இப்படி உடலை வளைத்து நகர்வது சாத்தியமில்லை. அதனால் மக்கள் அதைப் பார்த்து வியப்படைகின்றனர். எனக்கு காயம் ஏற்பட்டு விடும் என எனது தாயார் சிலவேளை கவலையடைவார்.
உடலை பின்னோக்கி வளைத்து காரின் அடிப்புறத்தை கடந்த யுவதி !
ஏனெனில் 44 வயதான எனது தாயார் ஷெரியும் 16 வருடகாலம் இக்கலையில் ஈடுபட்ட பின்னர் காயம் காரணமாக அதிலிருந்து விலகியவர்” எனவும் ஷெமிக்கா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாத்திரமல்லாமல் அமெரிக்க தேசிய கூடைப் பந்தாட்டச் சங்கத்தின் போட்டிகளின் இடை வேளைகளிலும் 
ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்
நிகழ்ச்சி நடத்துவதற்கு ஷெமிக்கா சார்ல்ஸுக்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர். 15 நிமிட நேர நிகழ்ச்சிக்கு அவர் 2300 டாலர் ஊதியம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings