கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான டீனேஜ் பெண்!

துருக்கியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்துடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.



துருக்கியில் உள்ள கராபுக் பகுதியைச் சேர்ந்த ருமைசா கேல்கி என்னும் 17 வயது பெண், உலகின் மிக உயரமாக டீனேஜ் பெண் என்ற பட்டத்தைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உள்ளார். 

7 அடி 9 இஞ்ச் உயரமுள்ள இவரின் பெற்றோரும், சகோதரர்களும் சாதாரண உயரம் கொண்டுள்ளனர். ருமைசா கேல்கி வேகமாக வளர்வதற்கு Weaver's syndrome என்னும் மரபணு பாதிப்பு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.



அசாதாரண உயரத்தை தவிர ருமைசா கேல்கியின் பாதம் 30.5 செ.மீ நீளமாக உள்ளது. அதீத வளர்ச்சியால் ருமைசாவிற்கு நடப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Tags: