உங்கள் ஏ.டி.எம் கார்டு பாதுகாப்பானதா?

ங்கள் மிக நெருக்கமான நண்பன் ஒரே நொடியில் உங்களுடைய மிக மோசமான எதிரியாக முடியுமா?


'மொபைல் கேஷியரா'க உங்கள் பர்ஸில் இடம் பிடித்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தொலைந்தால், அதுதான் உங்கள் வில்லன் நம்பர் ஒன்!

தொலைந்த கார்டுகள் வில்லங்க நபர்களின் கைகளில் சிக்கினால், உங்கள் கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் சில 'ஸ்வைப்'களில் ஸ்வாஹா செய்துவிடக்கூடிய அபாயம் அதிகம்!

அதிலும் இப்போது எல்லாம் உங்கள் கார்டு தொலைய வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை.

பெட்ரோல் பங்க், ஷாப்பிங் மால் போன்ற இடங்களில் நீங்கள் கார்டு மூலம் கட்டணம் செலுத்த உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளைக் கொடுக்கும் ஒரு சில நொடிகளே போதுமானது!

"உணவகம், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த நீங்கள் கொடுக்கும் கார்டை electronic data capture இயந்திரத்தில் ஸ்வைப் செய்வார்கள்.

அப்போது கார்டில் உள்ள தகவல்கள் அந்த இயந்திரம் மூலமாக வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையைத் தொடரலாமா என்பதை முடிவு செய்யும்.

அந்த இயந்திரம் போலவே கார்டில் உள்ள தகவல்களைப் பிரதியெடுக்கும் இன்னொரு இயந்திரம் இருக்கிறது.

அதை skimmerனு சொல்வாங்க. கார்டை ஸ்வைப் செய்யக் கொடுத்துட்டு நீங்க அதைக் கவனிக்காமல் இருக்கும் சந்தர்ப்பத்தில்,

 மறை விடத்தில் இருக்கும் ஸ்கிம்மர் இயந்திரத்தில் ஒரு முறை உங்கள் கார்டைத் தேய்த்து விட்டால், தேவையான தகவல்களை அந்த இயந்திரம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளும்.

ஒரே ஒரு ஸ்கிம்மர் இயந்திரத்தில் 100 கார்டுகளின் தகவல்களைப் பதிந்து கொள்ள முடியும்.

பிறகு, அந்தத் தகவல்களை வைத்து டம்மி கார்டு தயாரிப்பார்கள். சம்பந்தப்பட்ட வங்கியில் தங்களின் கைக்கூலி யாக வேலை செய்யும் நபர் மூலம்,

கார்டு உரிமையாளர் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அந்த டூப்ளிகேட் கார்டு மூலம் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கமுடியாது.

ஆனால், ஆன்லைன் வர்த்தகம் மூலம் விமான - டிரெயின் டிக்கெட் பதிவது, ஷாப்பிங் விண்டோ மூலம் பொருட்கள் வாங்குவது போன்ற காரியங்களை மேற்கொள்ளலாம்.

வங்கியில் உள்ள இவர்களின் பார்ட்னர் மூலம் 'ஒன்டைம் பாஸ்வேர்டு' பெற்று பரிவர்த் தனைகளை முடித்து விடுவார்கள்.

மாதாந்திர வங்கி ஸ்டேட்மென்ட் மூலமாகவோ அல்லது அக்கவுன்ட்டில் பணம் குறைவதை உணரும் போதோ தான்

இந்த மோசடியை கார்டின் நிஜ உரிமையாளர் உணர்ந்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு 


"தொலைந்த அல்லது தகவல் திருடப்பட்ட கார்டுகள் மூலம் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாது.

ஆனால், பொருட்கள் வாங்கும்போது, பின் நம்பர் தேவைப் படாது என்பதால், கார்டை எடுத்தவர்கள்

எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து விட்டு, கார்டைத் தூக்கிப் போட்டு விடுவார்கள்.

அதனால், கார்டு தொலைந்து விட்டது என்று நீங்கள் உணர்ந்த உடனேயே, வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, உங்கள் கார்டை பிளாக் செய்து விடுங்கள்.

பொதுவாக, உங்கள் கார்டின் எண், பாதுகாப்பு எண் (Card Verification Code - CVV) மற்றும் காலாவதி ஆகும் வருடம், மாதம் போன்ற தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளா தீர்கள்.

அதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் எளிதில் சாத்தியமாகும். கார்டை ஸ்வைப் செய்யக் கொடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

'பாரம்பரியம் மிக்க நிறுவனத்தில் தான் பொருள் வாங்குகிறோம்!' என்ற எண்ணத்தில் அசட்டையாக இருக்காதீர்கள்.

அங்கு வேலை செய்யும் யாரோ ஒரு பணியாளர் தில்லாலங்கடி பேர் வழியாக இருந்தால் சிக்கல் தான்.

வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்து அழைக்கிறோம் என்று கேட்டால் கூட,

உங்கள் பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுக்காதீர்கள்!"

வணிக நிறுவனங்களுக்கு 

"போட்டோவுடன் கூடிய கார்டு என்றால், போட்டோவில் உள்ள நபர்தான் கார்டைக் கொடுத்தவரா என்று ஊர்ஜிதம் செய்யுங்கள்.

'மனைவி - மகன் கார்டு' போன்ற சல்ஜாப்பு களை ஏற்றுக் கொள்ளாதீர்கள். சார்ஜ் ஸ்லிப் கையெழுத்தும்,

கார்டின் பின்புறம் உள்ள கையெழுத்தும் ஒரே சாயல் கொண்டதா என்பதையும் பரிசோதியுங்கள்.

அதேபோல, கார்டில் உள்ள பெயர், எண் ஆகியவை சார்ஜ் ஸ்லிப்பில் வரும் விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதையும் கவனியுங்கள்.

இவற்றை முறையாகக் கடை பிடித்தாலே பெரும் பாலான மோசடிகளைக் களைந்து விடலாம்!

வங்கிகளுக்கு 

இங்கு பொருட்களை வாங்கி கார்டில் பணம் செலுத்திய பிறகு, தொகை செலுத்தப்பட்ட விவரங்கள் வாடிக்கையாளருக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வரும்.

ஆனால், சீனாவில் கார்டை ஸ்வைப் செய்யும்போதே, உங்கள் மொபைல் போனுக்கு ஒரு தகவல் வரும்.


அதில் 'இந்த இடத்தில், இந்தக் கடையில், இவ்வளவு மதிப்பில் பொருட்கள் வாங்கி யுள்ளீர்கள்.

அதற்குப் பணம் செலுத்தலாமா?' என்று கேட்கும். நீங்கள் 'யெஸ்' என்று அனுப்பினால் மட்டுமே உங்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியும்.

அந்தத் தொழில்நுட்பத்தை இங்கும் அறிமுகம்செய்யலாம்.

ஐரோப்பிய நாடுகளில் கார்டுகளை ஸ்வைப் செய்யும் போது, பின் நம்பர் அடித்தால் மட்டுமே பண பரிமாற்றம் நடக்கும்.

இங்கும் அதை நடைமுறைப்படுத்த லாம். போட்டோவுடன் கூடிய கிரெடிட் - டெபிட் கார்டு வழங் கும் முறையை வங்கிகள் கட்டாயமாக்க வேண்டும்.

அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கை களையும் விடுங்கள்... இந்தக் காலத்தில் பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் அதைப் பாதுகாப்பதற்கு அதிகம் மெனக்கெட  வேண்டி இருக்கிறது.

உஷாராக இருங்கள்" என்று எச்சரிக்கிறார் பன்னீர்செல்வம்!
Tags:
Privacy and cookie settings