பேடு அணியாமல் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கோஹ்லி !

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனிக்கு பதிலாக கோஹ்லி விக்கெட் கீப்பராக செயல்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.


44வது ஓவரில் விக்கெட் கீப்பர் தேவையில்லை என நினைத்த டோனி, கோஹ்லியிடம் கிளவுசை கொடுத்துவிட்டு பவுண்டரி லைனில் களத்தடுப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து ஒரு ஓவருக்கு கோஹ்லி பேட் ஏதும் அணியாமல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
Tags:
Privacy and cookie settings