பைப்பிங் ஹாட் என்றால் என்ன? தெரியுமா?

அடுப்பிலிருந்து நேரடியாக உணவு மேஜைக்கு வசதியாக, சுடச்சுட வரும் உணவை பைப்பிங் ஹாட் (piping hot) ஆக உள்ளது என்கிறோம். இந்த அர்த்தத்தில் இதைப் பயன் படுத்துவதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின.
 பைப்பிங் ஹாட் என்றால் என்ன? தெரியுமா?
ஒரு காலத்தில், அண்டை அயலில் அல்லது கிராமத்தில் உள்ள பேக்கரிடம் இருந்து அன்றாடம் புதிதாகத் தயாரிக்கப் பட்ட ரொட்டியை வாங்கும் பழக்கம் இருந்தது.

ரொட்டிக்காரர் வாயிலில் நின்று ஒரு குழாய் அல்லது கொம்பை ஊதி, ரொட்டி தயாராகி விட்டது என்று அறிவிப்பார்.

தீர்ந்து போவதற்கு முன் அதை வாங்கிவிட வேண்டும் என்று மக்கள் விரைந்து செல்வார்கள். அதிலிருந்து பைப்பிங் ஹாட் என்பது வந்தது.
Tags:
Privacy and cookie settings