மேஜிக்கில் கின்னஸ் சாதனை புரிந்த அலெக்ஸ் மரணம் !

வள்ளி படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானவர் அலெக்ஸ் (வயது 52). மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
மேஜிக்கில் கின்னஸ் சாதனை புரிந்த அலெக்ஸ் மரணம் !
இவர், மேஜிக் நிபுணர் ஆவார். 24 மணி நேரம் தொடர்ந்து மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை புரிந்தவர். நடிகர் அலெக்ஸ் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவாக இருந்தார். 

இன்று அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப் பட்டது. மாலை 4 மணிக்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. 

4.25 மணிக்கு அலெக்ஸ் மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான திருச்சியில் நாளை (திங்கட்கிழமை) அவருடைய உடல் அடக்கம் செய்யப் படுகிறது.
Tags: