பைக் திருட்டு கவலைக்கு முற்றுப்புள்ளி !

பைக் திருட்டு என்பது சாதாரணமாகி விட்டது. என்ன தான் ஃபோர்க் லாக், வீல் லாக் என பூட்டி வைத்தாலும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களிலேயே 
கள்ளச் சாவி போட்டோ அல்லது லாக்கை உடைத்தோ திருடிக் கொண்டு போய் விடுகிறார்கள். 

பைக் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க... அது சார்ந்த குற்றங் களும் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன.

நடுவானில் விமானத்தில் இருந்து எரிபொருளை கொட்ட காரணம் தெரியுமா?

எப்படி ப்பட்ட பூட்டு போட்டுப் பூட்டினாலும் அதைத் தகர்த்தெறியும் பைக் திருடர்க ளிடமிருந்து நம் பைக்கைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

பைக் திருட்டு பற்றிய கவலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சாவிக்குப் பதில் விரல் ரேகை (Finger Print Sensor) மற்றும் ரகசிய எண் (Numeric Password System) பயன்படுத்தி 

இயங்க க்கூடிய (Automatic locking system) தொழில் நுட்பத்தை உருவாக்கி யிருக்கிறார் கும்பகோண த்தைச் சேர்ந்த விவேக்ராஜ்.

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ மெக்கா னிக்கல் இன்ஜினீயரிங் முடித்திருக்கும் விவேக்ராஜ், 
இறுதி யாண்டு புராஜெக்ட்டாக இந்த வித்தியாசமான கருவியை உருவாக்கி உள்ளார்.
கார்பரேட் நிறுவனங்களில் வருகைப் பதிவுக்கும், கதவு திறப்பதற்கும் பயன்படுத் தப்படும் விரல் ரேகை சென்ஸார் தொழில் நுட்பத்தை பைக்கிலும் பயன் படுத்த முடியும் என்று இவர் நிரூபி த்துள்ளார். 

அதாவது, பைக்கின் இக்னீஷியனை ஆன் செய்ய, சாவிக்குப் பதில் டேஷ் போர்டில் உள்ள சென்ஸாரின் மீது விரல் ரேகையைப் பதித்தால் போதும்.

அதேபோல், ஏடிஎம்-மில் பணம் எடுக்க ரகசிய எண்ணைப் பயன்படுத்துவது போல, டேஷ் போர்டில் நம்பர் பேனல் அமைத்தி ருக்கிறார். 

அதில், அந்த பைக்குக்கான ரகசிய எண்ணை அழுத்தினால் தான் பைக் இயங்கும்.
பைக்கைத் திறப்பதற்கு மட்டுமல்ல, பூட்டுவதற்கும் விரல் ரேகை அல்லது ரகசிய எண் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலே போதுமானது. 
வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகம் மற்றும் ஐ.ஐ.டி-யும் இணைந்து நடத்திய 'மை ஐடியா’ எனும் போட்டியில் 76 கல்லூரிகள் கலந்து கொண்டன. 

இதில் இவரது கண்டுபிடிப்பு மூன்றாம் பரிசை வென்றிருக்கிறது!
Tags:
Privacy and cookie settings