விமானத்தின் சக்கரத்தில் பயணம் செய்த இளைஞர் !

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த்தாவுக்கு வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்துள்ளார்.
விமானத்தின் சக்கரத்தில் பயணம் செய்த இளைஞர் !
இதனைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந் துள்ளனர். இதை யடுத்து அவரைப் பிடித்து விசாரணை நட்ததியுள்ளனர். 

அப்போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா (21) என்பது தெரிய வந்தது. இந்த சரக்கு விமானம் சுமத்ராவில் இருந்து கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொண்டுள்ளார்.

விமானம் சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்ததோடு, 34 ஆயிரம் அடி உயரம் வரை சென்ற போது அவருக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் சிரமமாக இருந்திருக்கும்.

வெப்ப நிலை மைனஸில் இருந்ததால், கடும் குளிர் காரண மாகவும் அவர் மரண மடைந்திருக்க கூட வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த இளைஞர் இவற்றை யெல்லாம் தாக்குப் பிடித்து உயிருடன் தரையிறங்கி விட்டார்.

மேலும், அந்த இளைஞர் விமானத்தில் இருந்து இறங்கிய போது அவரது காதில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியதோடு, சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதாகவும், இப்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞர் மீது, விமானத்தை விபத்துக் குள்ளாக்க முயற்சித்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளதோடு அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings