இயற்கை சீராக இயங்க !

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, நிபுணர்கள் மற்றும் சமுக ஆர்வலர்களைக் கடந்து சாதாரண மக்களும் விழிப்புணர்வு பெற்று அதற்கான கடமைகளை ஆற்ற வேண்டிய கட்டாய நிலையில் நாம் இன்று இருக்கின்றோம்.
நாம் வாழும் பூமி, நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், செடி, கொடி, மரங்கள், தாவரங்கள், வனங்கள், விலங்குகள், 
 
பறவைகள், உயிரின ங்கள் என நம்மை சுற்றியுள்ள அனைத்துமே நமது சுற்றுச் சூழல் தான் என்பது அனைவ ருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால், மறந்த விஷயம் என்னவென்றால் நமது சுற்றுச்சூழலை உருவாக்கும் நம்மை சுற்றியுள்ள அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
 
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும். இந்தத் தொடர்பின் சமநிலை பாதிக்கப் பட்டால் அது ஒட்டுமொத்த சுற்றுச் சூழலையும் பாதித்து நமக்கு தீமையை விளைவி க்கும் என்பதைதான். 
 
இயற்கைக்கும் தாவரங் களுக்கும் இடையிலும், தாவரங்களுக்கும் மனிதன், விலங்கினங் களுக்கும் இடையிலும் உள்ள சமன்பாட்டில் தான் இயற்கை சீராக இயங்க முடியும். 
 
மனிதன் இயற்கையை மதிக்க வேண்டும். நேசிக்க வேண்டும். மேலும் இயற்கையுடன் சம உறவு கொள்வ தற்குரிய இசைவான காரியங்களை செய்ய வேண்டும். 
 
தொழில் வளர்ச்சியும் பொருளாதார முன்னே ற்றமும் சுகாதாரமான சுற்றுச் சூழலை பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நகரங்கள் பெரும்பாலும் இயற்கை சூழ்நிலையை இழந்து முற்றிலும் மாசு நிறைந்த சூழ்நிலையில் உள்ளது. 
 
உற்பத்தி, லாபம், நுகர்வு என்பதைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் சுற்றுச்சூழல் பற்றியும் மக்கள் கவனம் கொள்ள வேண்டும்.
பெருவாரியான மரங்களை வளர்த்தெடுத்தல், கழிவுநீர்களை முறையாக பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைத்து காய், கனி, செடி, கொடி, மரங்களை வளர்த்து இயற்கை சூழலை உருவாக்க முடியும்.

மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து நிலத்தடி நீர் வளர்த்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

நாம் வளர்க்கும் ஒவ்வொரு மரமும் மழைநீர் சேகரிப்பு தொட்டி யாகவும் செயல்பட்டு நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உதவி செய்யும்.

பாலிதின், பிளாஸ்டிக் போன்ற சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் பொருட்களை குறைவான அளவு பயன்படுத்துதல் மற்றும் சரியான முறையில் திடக்கழிவு மேலாண்மையை செய்து நிலம் மாசுபடாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

முடிந்த அளவிற்கு பொது போக்கு வரத்து வசதிகளை பயன்படுத்தி நகரத்தின் புகையை குறைக்க முடியும்.

இயற்கை சீராக இயங்க !
மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துதல் மற்றும் நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் சிறிதள வேனும் சூரிய ஒளி போன்ற புதுப்பிக்க த்தக்க ஆற்றல்கள் மூலம்

நமது வீடுகளில் நாமே தயாரித்து மின்சார தயாரிப்பினால் ஏற்படும் வளிமண்டல மாசுகளை குறைக்க முடியும்.

கிராமங்களில் ஓரளவிற்கு இயற்கை சூழல் மிச்சமிருக்கிறது எனலாம். ஏனெனில் விவசாய தொழில் மட்டுமே இயற்கை சமன்பாட்டிற்கு துணை புரியும் செயல்களை செய்கிறது. 
 
விவசாயத்தை பெருக்குவதன் மூலம் நாம் இயற்கை சமன்பாட்டை பேண முடியும். கால்நடைகள் மற்றும் வேளாண்காடுகளுடன் கூடிய இயற்கை விவசாயத்திற்கு நாம் திரும்ப வேண்டும்.

இதனால் ரசாயன உரங்களினால் ஏற்படும் மண் மாசுபடுதல் மற்றும் நுண்ணுயிர்கள் அழிந்து போதல் போன்ற இயற்கை சமன்பாட்டிற்கு எதிரான காரியங்களை தவிர்க்க முடியும்.
காடுகளை உருவாக்கி இயற்கை சமன்பாட்டை உறுதி செய்து பருவநிலை மாறுபாடு மழையின்மை வறட்சி போன்ற நிலைமைகளை மாற்ற முடியும். 
 
இயற்கை அழகுடன் இணைந்த இன்பமான ஆரோக்கிய வாழ்விற்கு நாம் திரும்ப  வேண்டும்.
Tags:
Privacy and cookie settings