திருடுவது எப்படி? பயிற்சி கொடுத்த திருடன் !

கணினி படிப்பிப் பவர்கள், கணிதம் படிப்பிப் பவர்கள். தையல் படிப்பிப் பவர்களை கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் திருடுவதற்கு வகுப்பெடுப்ப வரை பற்றி அறிந்திருக் கிறீர்களா?
அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். திருச்சியில் திருட்டு வகுப்பெடுத்த ஆசிரிய திருடன் ஒருவரை பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

வேலையி ல்லாமல் அலைபவர்கள், வறுமையில் அலைப வர்களை பிடித்து திருடுவது எப்படியென்று வகுப்பெடுத்து, திருட வைத்துள்ளார். இதில் அதிர்ச்சி என்ன வென்றால், வேலையில்லா பட்டதாரிகள் சிலரும் அவரது மாணவர் களாக இருந்துள்ளனர்.

திருச்சியை சேர்ந்த துப்பாக்கி ரமேஷ் என்பவரே இந்த திருட்ட ஆசிரியராவார். ஓடும் ரயில்களில் பணம், நகை பறிப்பதுதான் அவரது தொழில்.

இதுதவிர ரயிலில் கொண்டு வரப்படும் சரக்குகளை திருடுவது, ரயில் தண்ட வாளங்களை திருடுவது, ரயில்வே குடியிருப்புக்களில் திருடுவது, ரயில்வே குடியிருப்பில் திருவதென கைவரிசையை காட்டி வந்தார்.

ஒன்றல்ல, இரண்டல்லு இருபது வருடங்களாக யாரிடமும் மாட்டாமல் தொழில் செய்து வருகிறார்.

இந்த ஒன்றே போதும்தானே அவர் ஆசிரியராக. இந்த தொழில் தன்னுடன் முடிந்து விடக்கூடாதென நினைத்த துப்பாக்கி ரமேஷ், தான் கற்றுக்கொண்ட வித்தைகளை சில மாண வர்களை தேடிப்பிடித்து கற்பிக்க ஆரம்பித் துள்ளார்.

வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடுபவர்கள் உள்ளிட்ட சிலரை வளைத்து வித்தைகளை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களின் முன்னர் திருச்சி ரயில்வே சந்திக்கருகில் பயிற்சி திருட்டை நடத்த மனது மாணவர்களை களமிறங் கியுள்ளார் துப்பாக்கி ரமேஷ். அவரும் சற்று தொலைவில் நின்று மாணவர்களின் வித்தை திறனை கவனித்துக் கொண்டிருந் திருக்கிறார்.

ஆனால், அவரது மாணவர்கள் மூவரும் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டு விட்டனர். துப்பாக்கி மட்டும் தப்பிச; சென்றுவிட்டார். மாணவத் திருடர்களை விசாரித்ததில் ஆசிரியர் பற்றி அறிந்து கொண்ட பொலிசார் துப்பாக்கி ரமேஷிற்கு பொறி வைத்தனர்.

சில நாட்களின் முன்னர் ரயில்வே களஞ்சியத்தில் திருட வந்த ரமேஷை பொலிசார் வளைத்து ப்பிடித்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings