வலுவான பெண்களும்.. வலிமையற்ற ஆண்களும் !

து ஆண்களுக்கு கசப்பானா சங்கதியாகத் தான் இருக்கும் ! இருந்தாலும் என்ன செய்ய..? உண்மை அப்படித் தானே இருக்கிறது..!
வலுவான பெண்களும்.. வலிமையற்ற ஆண்களும் !
ஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமை யானவள்.

நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கிய மாக வாழ்வது பெண்கள் தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீன மானவர்கள் தான்..!

ஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியே தான். பெண்ணை விட எல்லா விஷயத்திலும் 25 சதவீதம் கூடுதலானவன் ஆண்.

உதாரணத்திற்கு ஒரு ஆண் 100 கிலோ எடையை தூக்கினால், பெண்ணால் 75 கிலோ தான் தூக்க முடியும். அவ்வளவு தான் அவர்கள் பலம்.

இதெல்லாம் உடலுக்கு வெளியே தான், உடலுக்குள் என்று எடுத்துக் கொண்டால், பெண்ணை அடித்துக் கொள்ளவே முடியாது.

பைத்தியம், திக்குவாய், பிறவி ஊனம், காக்கை வலிப்பு போன்ற எல்லாமே பெண்களை விட ஆண்களுக்கே அதிகம்.

சராசரி ஆயுளிலும் கூட ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.
வலுவான பெண்களும்.. வலிமையற்ற ஆண்களும் !
தாய்மை என்ற பேற்றிற்காக பெண்ணுக்கு இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது. 

இம்முனோ குளோபின் என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.

ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் 'எக்ஸ்', 'ஒய்' குரோமோ சோம்களில் கூட பெண்ணினத்தை உருவாக்கும்

'எக்ஸ்' (X) குரோமோசோமே வலிமையையும் ஆரோக்கியமும் முழுமை யான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு 'எக்ஸ்' குரோமோ சோம்கள் தேவை.

ஆணுக்கு ஒரு 'எக்ஸ்' (X), ஒரு 'ஒய்' (Y) என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் 'ஒய்' அரை குறையாக வளர்ச்சி யடைந்த ஒரு  குரோமோசோம்.

அதாவது மருத்துவ கூற்றுப்படி மூளியாக்கப் பட்ட ஒரு பெண்ணே ஆண். பெண் ஆரோக்கி யத்திற்கு இதுதான் மிகப்பெரிய காரணம்.

மேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் 'ஹீமோபைலியா ஜிடென்ராஸ்' என்கிற ஹார்மோன்
வலுவான பெண்களும்.. வலிமையற்ற ஆண்களும் !
எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தை க்கு செல்கிறது.

இது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வ தில்லை. எப்படி ஆண் குழந்தையைத் தவிர்த்து,

பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி செல்கிறது என்பது விஞ்ஞான த்திற்கே புலப்படாத புதிராக இருக்கிறது.

இதனால் தான் பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியா க்களின் தாக்கு தல்களை சமாளித்து வாழ்ந்து விடுகின்றன.

உடல்  வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு. வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும், இயற்கை அளித் துள்ளது.

நீண்ட நாட்கள் வாழ இயலாமல், நோய்களை தாங்கிக் கொள்ளவும் முடியாத இந்த வலுவற்ற ஆண்கள், பெண்களின் வலிமையை உணர்ந்து

அனுசரித்து வாழ வேண்டும் என்பது தான் ஆண்களுக்கு இயற்கை இட்டிருக்கும் கசப்பான நியதி.
வலுவான பெண்களும்.. வலிமையற்ற ஆண்களும் !
சரி, அப்படி யென்றால் ஆணுக்கென்று எந்த பெருமையும் இல்லையா என்று கேட்டால்... இயற்கை இருக்கிறது என்ற பதிலைத் தான் தருகிறது.

வலிமையான வெளிப்புற உடலும், வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுப்பட்டு இனப் பெருக்கம் செய்யக் கூடிய சக்தியும் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணால் இது முடியாது.
Tags: