வங்கி கடன் அட்டை விநியோகிக்கப்படும் முறை தெரியுமா?

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு மகத்தானது. இருக்கும் இடத்தில இருந்து கொண்டு பொருட்களை வாங்க மிக முக்கிய பங்காற்றுகிறது.
வங்கி கடன் அட்டை விநியோகிக்கப்படும் முறை தெரியுமா?
பெரும் பாலான நாடுகளில்,  கடன் அட்டை வணிகத்துக்காக பயன்படுத்தப் படுகின்றன. அதே சமயம் இந்த கடன் அட்டையால் பல தொல்லைகள் ஏற்படுவதும் மறுப்பதற் கில்லை.

கடன் அட்டை தயாரிப்பு முறை
கடன் அட்டை தயாரிப்பு முறை
கடன் அட்டை பிளாஸ்டிக் பொருளைக் கொண்டு மிகவும் ரகசியமாக தயாரிக்கப் படுகிறது. இந்த அட்டை தயாரிக்கும் தொழிற் சாலைகள் இயங்கும் இடங்கள், பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படுகிறது. 

தயாரிப்பின் பொழுது புற ஊதா கதிர் கொண்டு அட்டையின் தரம் பரிசோதிக்கப் படுகிறது.

இந்த அட்டை பொதுவாக 14 முதல் 16 எண்கள் கொண்டதாக இருக்கும். மூன்று முதல் நான்கு எண்கள் அட்டையின் பின்புறம் பாதுகாப்பு எண்ணாக பிரசுரிக்கப்படும். 

அட்டையின் மேல்புறத்தில் மின்காந்தத் தாலான பட்டை இடப்படும். இவை விசா , மாஸ்டர் கார்டு, அமெக்ஸ், ஜேசிபி, டைநேர்ஸ் ஆகிய கடன் அட்டை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும். 

இந்த நிறுவனங்கள் தங்கள் சின்னங்களை இந்த அட்டையில் பதிவு செய்து வங்கிகளுக்கு விநியோகிக்கும்.

கடன் அட்டை விநியோகிக்கப்படும் முறை
கடன் அட்டை விநியோகிக்கப்படும் முறை
கடன் அட்டை வேண்டி விண்ணப்பதாரர் வங்கியை அணுகுவர். வங்கி விண்ணப்பதாரரின் நிதி நிலையை ஆராய்ந்து கடன் அட்டையை வழங்குகிறது.

விண்ணப்பதாரரின் பெயர், கடன் அட்டை எண் மற்றும் காலாவதி தேதி முதலிய தகவல்கள் மின்காந்த பட்டையில் ஏற்றப்படும்.

மேலும் விண்ணப்பதாரரின் பெயர், காலாவதி தேதி, பாதுகாப்பு எண் ஆகியவை கடன் அட்டையில் பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.

பெரும்பாலான வணிக மையங்கள் விசா, அமெக்ஸ், டிஸ்கவர், டைநேர்ஸ் போன்ற நிறுவனங்களின் கடன் அட்டையை ஏற்றுக் கொள்ளும். 

அட்டைதாரர் கடன் அட்டையை இகாமர்ஸ் என்று சொல்லப்படும் வலைத்தளம் சார்ந்த வணிகத்திலும் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பொருட்களை வாங்க முடியும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 350 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகம் இந்த முறையில் நடைபெறுகிறது.

கடன் அட்டை மதிப்பெண் (credit Score)
கடன் அட்டை மதிப்பெண் (credit Score)
வளர்ந்த நாடுகளில், அட்டைதாரர்கள் நல்ல கடன் அட்டை மதிப்பெண் கொள்ள வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

இந்த மதிப்பெண் பல்வேறு காரணிகளை கொண்டு நிர்ணயம் செய்யபடுகிறது.

கடன் அட்டையின் கடனை,  நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்துவது, வீட்டுச் செலவுகளை கடன் அட்டை மூலம் உரிய நேரத்தில் செலுத்துவது, 

வீட்டுக் கடனை உரிய நேரத்தில் செலுத்துவது போன்றவை மதிப்பெண்ணை நிர்ணயப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

வீட்டு கடன் பெறுதல், வாடகைக்கு வீடு பெறுதல், தொலை பேசி வாங்குதல் போன்ற முக்கிய தேவைகளுக்கு நல்ல கடன் மதிப்பெண் (credit Score) பெற்றிருப்பது அவசியமாகிறது.

கடன் அட்டை சரிபார்க்கப்படும் முறை
கடன் அட்டை சரிபார்க்கப்படும் முறை
கடன் அட்டைதாரர் வலைத்தளத்திலோ அல்லது நேரடி முறை மூலமாகவோ அட்டையை பயன்படுத்தும் பொழுது, 

அட்டை எண், காலாவதி தேதி, பாதுகாப்பு எண் ஆகியவை அட்டை சரிபார்க்கும் கணினிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கடன் அட்டை எண் சரிபார்க்கப்பட்டு அவற்றின் முடிவு ஒன்று அல்லது இரண்டு வினாடிகளுக்குள் வணிகரிடம் தெரிவிக்கப்படும்.

பெரும்பாலான கணினிகள் ஒரு வினாடிக்கும் கீழாக கடன் அட்டையை சரி பார்த்து விடும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் இந்த கணினி தன்னிச்சையாக பணத்தை கடன் அட்டை தாரரின் வங்கியில் இருந்து வணிகரின் வங்கிக்கணக்கிற்கு மாற்றி விடும்.

வணிகர்கள் மேம்பட்ட கடன் அட்டை சரிபார்க்கும் முறையை பயன் படுத்துகிறார்கள்.

இதன் மூலம் கடன் அட்டைதாரரின் வீட்டு விலாசம், பாதுகாப்பு எண், எந்த இடத்திலிருந்து அட்டை உபயோகப் படுத்தப்பட்டது, எந்த கணினி மூலம் இந்த அட்டை உபயோகப் படுத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட அட்டை எண், தடை செய்யப்பட்ட பொருட்கள் வணிகத்தில் ஈடுபடுத்தபட்டதா ஆகியவை பரிசோதிக்கப்படும்.

இதன் மூலம் வணிகர்கள் தங்கள் வணிக தளத்தில் தவறாக கடன் அட்டை பயன்படுத்து வோரிடமிருந்து தங்கள் வணிகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். 

கடன் அட்டை உரிமையாளர் கவனத்திற்கு 
கடன் அட்டை உரிமையாளர் கவனத்திற்கு
கடன் அட்டையை பாதுகாப்பாக வைப்பது மிக அவசியம். கடன் அட்டை வாங்கும் பொழுது வருடாந்திர வட்டி சதவீதம் எவ்வளவு என்பதை கவனிக்க வேண்டும்.

வருடாந்திர கட்டண தொகை ஏதேனும் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். 

தற்சமயத்தில் பல வங்கிகள் செய்யும் செலவுகளுக்கு 1 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பணத்தை திருப்பி அளிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

வலை தளத்தில் கடன் அட்டையை பயன் படுத்தும்போது வணிகர்கள் பாதுகாப்பான(SSL) வலை தளத்தை கொண்டுள்ளனரா என பரிசோதிக்க வேண்டும்.

எந்த ஒரு காரணத்துக் காகவும் கடன் அட்டையை வணிகர்களின் வலை தளத்தில் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

பாதுகாப்பு எண் (CVV2)  உபயோகிக்கும் வணிகர்களின் வலைதளத்தை பயன் படுத்துவது சிறந்தது. 
தரமற்ற வலை தளங்களில் கடன் அட்டையை உபயோகப்படுத்தக்கூடாது
தொலைப்பேசியில் கடன் அட்டை எண்ணை தரும்பொழுது மறுமுனையில் உள்ளவரின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து கடன் அட்டை எண் கொடுக்கப்பட வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை கடன் அட்டையில் நடந்த வணிகத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். கடன் அட்டை தொலைந்துவிட்டால் உடனே வங்கிக்கு தெரிய படுத்த வேண்டும்.

பாதுகாப்பு தரமற்ற வலை தளங்களில் கடன் அட்டையை உபயோகப் படுத்தக்கூடாது.

அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு 8.6 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் அட்டை மோசடி நடை பெறுகிறது. 

கடன் அட்டையை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி விஞ்ஞான உலகில் வாழ்வை வளப்படுத்துவோம்.
Tags:
Privacy and cookie settings