அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !





அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !

Anonymous
By -
பலர் காலையில் எழுந்ததும் ஒரு சில பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதில் முதன்மையான ஒன்று எழுந்ததும் மொபைலைப் பார்ப்பது.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
மேலும் சிலர் எழுந்திருக்கும் போதே எதற்காக விடிந்தது என்று எரிச்சலுடன் எழுந்திருப்பார்கள். இது போன்று ஒரு சில விஷயங்களை மக்கள் காலை வேளையில் செய்து வருகிறார்கள். 

நீங்கள் காலையில் எப்போதும் குழப்பமான மன நிலையோடு எழுந்திருக்கிறீர்களா? காலை உணவைத் தவிர்க்கிறீர்களா?

அப்படியெனில் சில எளிய மாற்றங்கள் உங்கள் காலை நேரத்தை இதமாக்கும். அந்த மாற்றங்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சட்டென எழுந்து ஜிம்மிற்குச் செல்லுதல்
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
காலை என்பது ஒரு நிதானமான நேரம். எனவே அமைதியாக, மெதுவாக எழுந்து உங்களது தசைகளை மெதுவாக அசையுங்கள்.

நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது உங்கள் வலது பக்கமாகத் திரும்பி எழுந்திருங்கள். இது உடலின் ஆற்றல் ஓட்டத்தை சீராக்கும்.
நெட்டி முறிக்காமை
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
நாம் காலையில் எழுந்திருக்கும் போது, நமது தசைகள், குறிப்பாக முதுகெலும்பு சற்று விறைப்பாக இருக்கும். 

நாம் நெட்டி முறிக்காமல் எழுந்திருக்கும் போது இந்த விறைப்புத் தன்மை தொடர்வதால், இது நமது நாள் முழுவதும் நமது ஆக்கத் திறனை சமரசம் செய்து விடும்.

ஆகவே எழுந்ததும் மெதுவாக நடக்கவும். தசைப் பிடிப்புகள், தசை இறுக்கங்கள் இருந்தால், நெட்டி முறிக்கவும். மூன்று அல்லது நான்கு மெதுவான நெட்டிகள் மற்றும் சில பெருமூச்சுகள் உதவியாக இருக்கும்.

ஒரு கப் தேனீருடன் நாளைத் தொடங்குதல்
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
ஒரு சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற் கான ரகசியம் காலையில் தேனீர் அல்லது காரத் தன்மையான பானத்துடன் அந்த நாளைத் தொடங்கக் கூடாது. 

உங்களது நாளை சர்க்கரை மற்றும் பால் சேர்ந்த டீ அல்லது காபி போன்ற அமிலத் தன்மையான பானங்களுடன் தொடங்க வேண்டாம். 

எலுமிச்சை சாறு மற்று தண்ணீர் குடிக்க வேண்டும். வைட் டீ அல்லது கிரீன் டீ குடிப்பதைப் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
போன்களை செக் பண்ணுதல்
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
மொபைல் போன்களை செக் பண்ணுவது, ஈமெயில் செக் பண்ணுவது மற்றும் வேறு உத்திகளை ஒரு காலையில் எழுந்தவுடன் செய்யாதீர்கள். 

காலையில் எழுந்து முதல் இரண்டு மணி நேரத்திற்குள் உலகப் பிரச்சனைகள் எதையும் உடனடியாக தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. 

உங்களது ஆற்றலை முக்கியமற்ற வேலைகளில் செலுத்தாமல் மிக முக்கியமான வேலைகளில் செலுத்துங்கள்.
காலை உணவைத் தவிர்த்தல்
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
காலை உணவைத் தவிர்ப்பதால், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் ஆகியவை ஏற்படுகின்றன என சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

நீங்கள் காலையில் சாப்பிடவில்லை என்றால், அந்த நாள் முழுவதும் உங்களது உணவுத் தேர்வு தவறாகவே இருக்கும்.

நீங்கள் காலையில் ராஜா மாதிரி உணவு உட்கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஏதாவது சாப்பிட வேண்டியது அவசியம்.

சிடு சிடுப்புடன் எழுந்திருத்தல்

அதிகமானோருக்கு விடியற்காலை அமைதியற்றதும் பரபரப்புடையதுமாக இருக்கிறது. 

எனவே அப்படி இருப்பதை தவிர்க்க முயல வேண்டும். எப்போதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பழக வேண்டும்.

அன்றைய நாளை முன்னதாகவே திட்டமிடாமை
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
உங்களது துணிகளை மற்றும் உணவுகளை ஒரு நாள் முன்னதாகவே திட்ட மிடுகிறீர்களா? மக்கள் செய்யும் ஒரு மிகப்பெரிய தவறு முன்னதாகவே திட்டமிடாமை.

ஒரு நீண்ட நாளுக்கு பின்னர், அடுத்த நாள் காலைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம்.  ஆனால், உணவுகளைத் திட்டமிடுதல் மற்றும் துணிகளை எடுத்து வைத்தல் ஆகியவற்றை முன்னதாகவே செய்து விடுங்கள்.
இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னரே அடுத்த நாள் காலை உணவிற்குத் தேவையானவற்றைத் தயார் செய்து வையுங்கள்.
Tags: