தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !

• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில் தான்.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.

• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.

• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்ன தான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. 

ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல் படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

• காந்திஜி முதன் முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• மனித உடலிலேயே மூக்கின் நுனி தான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.

• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!

• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.
• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.

• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.

• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதை தான்.

• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.

• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.
• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.

• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.

• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.

• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன் முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• மாரடைப்பால் நின்று போன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.

• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள "திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.

• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.
• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன் முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.

• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.

• பெட்ரோலை "கேஸலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.

• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.

• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.

• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.

• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.
• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.

• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.

• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.

• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.
தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் !
• "கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.

• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் "அக்பராபாத்'.

• புயல் உருவாகப் போவதை முன் கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோ கிராஃப்.
• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடி தான்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம் தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..
Tags: