சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக !

நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது. சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லை களையும் ஏற்படுத்தலாம்.

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆக !
அது போன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்த கூடியது தான் குப்பைமேனி. இதை யாரும் வளர்ப்பதில்லை என்றாலும் காடுமேட்டில் தானே வளரும் தன்மை உடையது.

சிறு செடியாக வளரும், இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். 

காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். வசீகரப்படுத்தும் இயல்புடைய இந்த குப்பைமேனி ஒரு மாந்திரீக மூலிகையாகும்.
குப்பை மேனியின் மகத்துவங்கள்

இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும். குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெ யுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும். குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.
Tags: