மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் !

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக  அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது.
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் !
இது மட்டும் தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ? 

சரி அப்படி யென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?

(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று 

ஒரு போதும் இருந்து விடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம்.

அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம் மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 

மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும்.
இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory card னுடைய class என்று குறிப்பிடப்படுகிறது 

அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed ஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second

Class 8 - 8MB per second

Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக் கொள்கிறது இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே 

தெரியாது நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்.
Tags: