ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !





ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !

Anonymous
By -
சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது. இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. 
ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !
இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை என முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப் புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித் தழைகளை உடன் வைத்து விடுவர். மேலும் இது பூச்சிகள் வருவதை தடுக்கும்.

நொச்சி இலையின் மகத்துவங்கள்

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலைவலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலையணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம்.
விண்வெளி பயணம் உயிருக்கு ஆபத்தானதா?
தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம்.

இந்த இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும். இந்த நொச்சி பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.

நொச்சி துவையல்

முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு போட்டு நொச்சி இலையை லேசாக வறுக்கவும். பிறகு இதனுடன் வெற்றிலை மிளகு மற்றும் மிளகாய் செடியின் இலையை அரைத்தால், நொச்சி இலை துவையல் ரெடி.

பயன்கள்

இந்த துவையலை தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால்  ஆஸ்துமா நோய் குணமடையும். இதை முதுகில் பூசிக்கொண்டால், முதுகு வலி பறந்து விடும். மேலும் சுவாஸ கோளாருகள் நீங்கி நல்ல அரோக்கியத்துடன் இருக்கலாம்.
நொச்சி கஷாயம்

நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் வாணலியல் வைத்து சிறிது மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்தால் நொச்சி கஷாயம் ரெடி.
பெண்களை தாக்கும் எலும்புருக்கி நோய் !
பயன்கள்

இந்த கஷாயம் மலேரியா நோயை விரட்டும் சக்தி வாய்ந்தது. நாக்குப்பூச்சி வாத நோய்கள் மற்றும் வயிற்றுவலி நீங்கும்.
Tags: