பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியம்.
பாஸ்போர்ட் வாங்குவது
வெளி நாடுகளில் படிக்க விண் ணப்பிக்கும் போதே, கடவுச் சீட்டுக்கும் விண்ணப்ப த்திட வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பதற்ற த்தையும் ஓரளவு தவிர்க்க முடியும்.

சமீபகா லமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங் களிலும் தொடங்க ப்பட்டுள்ள கடவுச் சீட்டுப் பிரிவில் பெறலாம்.

முக்கியமாக இரண்டு ஆவணங் களை விண்ணப் பத்துடன் இணைக்க வேண்டும்.

1. இருப்பிடச் சான்றிதழ், 2. பிறப்புச் சான்றிதழ்.

இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, 

தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்ற வற்றைக் காட்டலாம்.

பிறந்த நாளு க்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ் களையோ, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ் களையோ ஆதாரமாகக் காட்டலாம்.

சனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்த வர்கள், வருவாய்த் துறை அல்லது பதிவுத் துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ் களையே ஆதார மாகக் கட்ட வேண்டும்.

விண்ணப் பத்துடன் மேற் குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ் களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும்.
நேரடியாக கடவுச் சீட்டு அலுவலக த்திற்கு விண்ணப் பத்தைச் சமர்ப்பிக் கிறவர்கள் உண்மைச் சான்றித ழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பி த்துள்ள நகல்க ளுடன் ஒப்பிட்டு சரிபார் ப்பார்கள்.

சொந்த ஊர் விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாண வர்கள் அப்பகுதி களிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப் பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப் பிக்கலாம்.

அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப் பதாயின், தங்கிப் படிக்கும் இடத்தின் முகவ ரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும்.


அதற்கான ஆதா ரத்தை அந்தக் கல்வி நிறுவன தலை வரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப் பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப் பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.

பொதுவாக கடவுச் சீட்டுக்கு விண்ணப் பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத் திலிருந்து விண்ணப் பத்தை காவல் துறைக்கு அனுப்பி, 

நீங்கள் அந்தப் பகுதியில் தான் வசிக்கி றீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா?

அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்ற மற்றவர் என காவல் துறை அறிக்கை பெற்ற பிறகே கடவுச்சீட்டு வழங்குவர்.
சிறுவர் சிறுமியர் க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பி னால், பெற்றோ ர்கள் கடவுச் சீட்டு இருப்பவராக இருந்தால், காவல் துறை அறிக்கை தேவைப் படாது.

பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லா விட்டால் அவர்தம் விண்ணப் பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

கட்டணம்

பொதுவாக சாதாரண கடவுச் சீட்டு பெற ரூ. 1000/- செலுத் தினால் போது மானது . ஆனால் ஜம்போ கடவுச் சீட்டு பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.

ஜம்போ கடவுச் சீட்டு – அடிக்கடி வெளிநாடு செல்கி றவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக் கூடியது. சிறுவர் சிறுமி யர்க்கு கட்டணம் ரூ. 600/-.

தத்கல் திட்டம்

பொதுவாக, கடவுச்சீட்டு விண்ணப்ப ங்களை மண்டல கடவுச் சீட்டு அலுவல கத்தில் செலுத்தி 30 நாள்களில் கடவுச் சீட்டு வழங்கப் பட்டு விடுகின்றன. 

அவசரமாக வெளிநாடு செல்ப வர்க்கு உதவியாக விரைந்து கடவுச்சீட்டு பெறவும் வகையிரு க்கிறது. 

இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படை யில் விரைந்து கடவு ச்சீட்டு பெற முடியும்.
காவல் துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல் துறைச் சான்று தேவைப் படாத 14 வயதுக்கு உட்பட்ட (கடவுச் சீட்டு உடைய பெற்றோ ர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர்,

ஆட்சேபனை இல்லாச் சான்று பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணை வியர் மற்றும் கடவுச் சீட்டை தொலைத்து விட்டோர் மட்டுமே தத்கல் திட்டத் தின் கீழ் விண்ண ப்பித்து பயன் பெற முடியும்.

அவ்வாறு விரைந்து கடவுச் சீட்டு பெற விழைவோர் ரூ.2500/- கட்டண மாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாய மாக சமர்பிக்க வேண்டும்.

புதுப்பித்தல்

கடவுச்சீட்டு பெற்ற வர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன் படுத்தலாம். பிறகு புதுப் பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்க ளுக்கு

1. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சாஸ்திரிபவன், நுங்கம் பாக்கம், சென்னை -34.

2. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், டபிள்யூ.பி. சாலை, திருச்சி – 620 008.
மேலும், புதுவை யிலும், மதுரையிலும் கடவுச்சீட்டு விண் ணப்பம் பெறும் மையங்கள் உள்ளன.

1. பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், ஒருங் கிணைந்த கோழிப் பண்ணை மேம் பாட்டுத் திட்டக் கட்டடம், கால்நடைப் பராமரிப் புத்துறை வளாகம்,

மறைமலை அடிகள் சாலை, புதுவை – 605001.

2. பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், பழைய இராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், மதுரை – 625 001.

மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவிநாசி சாலை, உப்பிலி பாளையம், கோவை.

இணையத் தளங்கள் வழியாகவும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். முகவரிகள் :
விண்ணப் பங்களை மேற்கண்ட அலுவலகங் களிலோ அல்லது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலோ அல்லது முகவ ர்களிடமோ சமர்ப் பிக்கலாம்.

கடவுச்சீட்டு விண்ணப் பத்துடன் வழங்கப் படும் தகவல் மடிப்பித ழிலேயே அனைத்து விபரங் களும் உள்ளன.
Tags: