அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது தாய்ப்பாலை பக்கெற்றுகளில் அடைந்து விற்பனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
தாய்ப்பால் வழங்க முடியாத நிலையிலுள்ள பெண்களும் உடற்கட்டில் ஈடுபடுபவர்களும் அவரிடம் தாய்ப்பாலை விலைக்கு வாங்குவர் என அவர் எதிர் பார்க்கிறாராம்.
மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த லிஸா எனும் இப்பெண் 3 பிள்ளைகளின் தாய் ஆவார். ஒரு அவுன்ஸ் அளவிலான தாய்ப்பாலை ஒரு டொலருக்கு (130 ரூபா) தான் விற்பனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்து வரும் லிஸா, தான் மதுபானம் அருந்துவது இல்லை,
போதைப் பொருட்களை பயன்படுததுவது இல்லை, தினமும் விற்றமின்களை உட்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் உடற்கட்டில் ஈடுபடுபவர்கள் இவ்வாறு தாய்ப்பாலை வாங்கி அருந்துவதால் கிடைக்கும் நன்மை குறித்து டாக்டர் ஷோன் ஜெயகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உடற்கட்டில் ஈடுபடுபவர் களுக்கு தாய்ப்பாலை விட புரதம் மிகுந்த பசுப்பால் சந்தையில் கிடைக்கிறது என அவர் கூறியுள்ளார்.

