தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் எதிரான வாக்கு என்பது இதன் பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையில் ஒன்று இந்த நோட்டா பொத்தான். 

நோட்டா வாக்கு - NOTA
எந்த தேர்தலிலும் ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்திய குடிமகனும்  இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுப்பதாக அர்த்தம். 

இச்சட்டம் உச்ச நீதிமன்றம்  அளித்த தீர்ப்பின் அடிப்படையில்  செப்டம்பர் 27 ஆம் தேதி  இப்பொத்தான் வாக்கு இயந்திரத்தில் பொருத்தப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது இறுதியில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் .இந்த வசதி முதன் முதலில்  தமிழகத்தில்  ஏற்காடு இடைத்தேர்தலில் அமலுக்கு வந்தது.