நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi !

தமிழர்களுக்காக தமிழனால் 2010 ஆம் ஆண்டு அண்ணன் சீமானால் தொடங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி - Naam Tamilar Katchi !
தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் தொடங்கப்பட்ட நாம் தமிழரின் இயக்கமே பின்னாளில் நாம் தமிழர் கட்சியாக உருவெடுத்தது.

இந்த  அமைப்பு கட்சியாக மாற முழுக்க காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையே.

கட்சி கொள்கைகள்

1 . தமிழினத்தை மீட்டெடுப்பதே முதன்மை நோக்கம்.

2 . ஈழத்தமிழர் பிரச்சினையை தீர்த்து    தமிழர்க்கு தனித்தாயகம் மற்றும்  தனியரசு அமைப்பது தான். தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவது.

3 . மாநிலம் அனைத்திற்கும் அதன் உரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவது, அதற்கான அரசியல் சட்டதிருத்தில் திருத்தம்  செய்திடப் போராடுவது.

4 . தமிழ் மொழியை  வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது.

5. சமதர்மப் பாதைக்கு வழிவகுத்து  தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மாற்றுவது.

6 . நிலம் இல்லாத  நாற்பது சதவீத மக்களுக்கும் வீடோ  அல்லது வீட்டு மனையாகவோ  கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவது.

7 . இயற்கைக்கு   ஏற்ற வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற புதிய  கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது. தொழில் நுட்பக் கல்வியை ஊக்குவிப்பது.

8 . உலகில் உள்ள அணைத்து  தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர்களுக்கான  உரிமை வென்றிடப் போராடுவது.

9 . சமனியத் தமிழரசை நிலைநாட்டுவது. பொருள் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது.

10 . உழைப்பாளர்களின் உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அகற்றுவது.

11 . சாதி மற்றும் மத ஆதிக்கத்தை ஒழிப்பது. சமத்துவமாய் வாழ வழிவகை செய்வது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)