நேருவின் இறப்புக்குப் பின் இந்திரா காந்தி லால் பகதூர் சாசுத்திரி-யின் அரசினுடைய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு  தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் - இந்திய தேசிய காங்கிரஸ் - Indian National Congress
லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் இறப்பை தொடர்ந்து பிரதமர் ஆனார் . அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் காமராசின் முயற்சியே முக்கிய காரணமாகும். 

பின் 1967ஆம்  ஆண்டு நடந்த தேர்தலில் மிகப் பெரிய அளவில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். 

காங்கிரசின் கொள்கைகளுக்கு எதிராக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி கொள்ளகை உடைய தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு முக்கிய காரணம் என கருதப்படுகிறது. 

இதனால் காங்கிரசு இரண்டு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் அனைவரும் இந்திரா குழுவுக்கு தங்களது ஆதரவை அளித்ததால் 

இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா காந்தி தலைமையிலான குழுவே  இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. 

எனவே எதிர் குழு நிறுவன காங்கிரசு என்ற பெயரை மாற்றிக் கொண்டது. 

1970-ல்  இந்திரா ஆட்சியில் பசுமை புரட்சி நடைபெற்றது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையில் காங்கிரசு மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 

1972 திசம்பர்  இந்தியா பாக்கிஸ்தான் போரில் வெற்றிபெற்று வங்காளதேசம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். 1974 ஆம் ஆண்டு  சிரிக்கும் புத்தர்  அணு சோதனையை நடத்தினார்.