1967-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன் முதலில்  தேர்தலை சந்தித்தது . போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்றது. 

திமுக - திராவிட முன்னேற்றக் கழகம் - DMK !
இதே போல் 1971 ஆம் ஆண்டு  23 இடங்கள், 77-ஆம் ஆண்டு  19, 80-ஆம் ஆண்டு  16, 84-ஆம் ஆண்டு  27, 89-ஆம் ஆண்டு  31, 91-ஆம் ஆண்டு  29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக கைப்பற்றியது. 

1989-ல் இந்தியாவில் உருவாக்கப்பட்ட  தேசிய முன்னணியில் மிகப் பெரிய  பங்கு வகித்தது திமுக. அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும்  இடம் கிடைத்தது . 

1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. புதுவை, ஆந்திரா,அந்தமான்,  காரைக்கால், கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களிலும்  இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. 

திமுக.வின் 'முரசொலி' செய்தித்தாள்  அதிகாரப்பூர்வ ஏடாக  வெளிவந்து கொண்டிருக்கிறது. தி.மு.க கட்சி   சார்பில் இந்திய மக்களவையில் 1998-ல் ஆறு பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். 

பின்னர் 1999-ல்  நாடாளுமன்ற தேர்தலில் 18 இடத்தில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தல் மிகவும்  கவனிக்க பட வேண்டியது  

ஏனென்றால் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு (திராவிடத்திற்கு) எதிரான பாரதிய ஜனதாவுடனும் (பிஜேபி) தன்னிடமிருந்து வெளியேறி 

புதிய கட்சியை உருவாக்கிய வைகோ வுடனும்  தேர்தல் கூட்டணி வைத்தது.2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பிஜேபி, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர் கொண்டது.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ம.தி.மு.க, பா.ம.க  உள்ளிட்ட 7 கட்சிகளுடன் தி.மு.க தனது  கூட்டணி அமைத்து  

தனது அரசியலில் முதன் முதலில் வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட நாற்பது  தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. 

இதனால்  தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியரசு  மந்திரிகளாக பதவி கிடைக்க பெற்றார்கள்.

இதனால்  மத்திய ஆட்சியில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கும் மாபெரும் சக்தியாக தி.மு.க உருவானது.