பாஜக - பாரதிய ஜனதா கட்சி - Bharatiya Janata Party !

இந்திய அரசியலின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளில் இதுவும் ஒன்றாகும். 1980-ல் நிறுவப்பட்ட இந்தக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் 

பாஜக - பாரதிய ஜனதா கட்சி - Bharatiya Janata Party !
பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக வலம் வருகிறது. 

இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது பிஜேபி என்றும் சுருக்கமாக அழைப்பார்கள்.

பிஜேபி கட்சி, தீனதயாள் உபாத்யாயா அவர்களால்  1965-ல் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவமே இக்கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையாகும் 

"இந்து தேசியவாதக் கட்சி" என்று சுட்டிக்காட்டபடும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தின் சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. 

வலதுசாரிக் கொள்கையுடைய இந்திய  கட்சிகளில் இக்கட்சியும் ஒன்று. 

அடல் பிகாரி வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்ட   தேசிய ஜனநாயகக் கூட்டணி,  1998 முதல் 2004 வரை இந்தியாவை சிறந்த முறையில் ஆண்டது. 

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனது முழு 5 வருட காலத்தையும் பூர்த்தி செய்தது இதுவே முதல் முறையாகும். 

2004-ல் பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு,பிஜேபி  நாடாளுமன்றத்தில்  எதிர்க் கட்சியாக இருந்தது. 

2014 ஆம் ஆண்டு  மக்களவை தேர்தலில் 282 இடங்களில் மாபெரும்  வெற்றி பெற்று நரேந்திர மோdi தலைமையில் சிறந்த ஆட்சி அமைத்துள்ளது.

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)