திமுக கூட்டணியில், விசிக கட்சியின் நிலை !

0
வருகின்ற பதினெட்டாம் தேதி நடைபெற உள்ள தமிழகத்தின் 40 மக்களவை தொகுதி பொது தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் பிரசாரம் ஆனது சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாமக பாஜக தேமுதிக ஒரு கூட்டணியும், திமுக கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக என்ற மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது. 
திமுக கூட்டணியில், விசிக கட்சியின் நிலை


இதனை தவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் தனித்து போட்டி யிடுகின்றன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது அதில் சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சிக்கு என்று வாங்கப்பட்ட தனிச் சின்னத்தில் போட்டி யிடுகிறார். 

விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் திமுக உறுப்பினராக மாறி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுகிறார். கடந்த 4 தேர்தலாக தோல்வியையே சந்தித்து வரும் திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில், எப்போதும் திமுகவை காப்பாற்றி விடும் வட தமிழகத்தில் போட்டி யிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற கணக்கில் போட்டியிடும் 20 தொகுதிகளில் 13 தொகுதிகளை வடக்கு பகுதிலேயே திமுக தேர்ந்தெடுத்தது.

வட தமிழகத்தில் பெரும்பான்மை யாக இருக்கும் சமுதாயமான வன்னியர் சமுதாயம் ஆனது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதால் திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவை தந்தது. இதனை கவனித்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எந்த பகுதிக்கும் பிரச்சாரம் செய்ய தேவியில்லை. 

அதே போல அவர் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் பானை சின்னம் மட்டுமே வரையப் பட்டுள்ளது, மாறாக வேட்பாளர் பெயரோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறமோ, கொடியோ எங்கும் இல்லை. திமுக தலைவர்களின் பெயர்களை மட்டும் போட்டு பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று மட்டுமே சுவர் விளம்பரங்கள் செய்யப் படுகின்றன. 

சிதம்பரம் தொகுதி நிலவரம் இவ்வாறு இருக்க மற்ற தொகுதிகளில் திமுக விளம்பரங்களில் எங்கும் திருமாவளவன் பெயர் வராதபடி கண்கானிக் கப்பட்டு வருகிறது. இதை பார்த்த விசிக கட்சியின் தொண்டர்கள் இதற்கு நாம் தனியாகவே நின்றிருக்க லாம், திமுக கூட்டணியில் சேர்ந்து அவமானத்தை அனுபவிக்க வேண்டி இருக்கிறது என்று நொந்து போயுள்ளனர்.


இந்நிலையில் ஏற்கனவே சுவரில் வேட்பாளர் பெயரும் இல்லை, கட்சி பெயரும் இல்லை தற்போது சாலையில் கட்டி யிருக்கும் கொடியில் கூட விசிக கட்சியின் கொடியிருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் பிரச்சாரத்திற் காக கட்டப்பட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் கொடியி லிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை சாலையில் சென்ற பேருந்தை நிறுத்தி அதன் கூரையின் மேல் ஏறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியினை மட்டும் ஒரு இளைஞர் அறுத்து எறிகிறார்.

இதனை கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், தலைவரு க்கும் மரியாதை இல்லை நமது கட்சிக்கும் மரியாதை இல்லை, கொடிக்கும் மரியாதை இல்லை என நொந்து போயுள்ளனர். 

திமுக வேட்பாளர்களும் இதனால் மற்றொரு பெரும்பான்மை சமுதாயமான தலித் சமுதாய வாக்குகள் கிடைக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். விசிகவை கூட்டணி யில் சேர்த்தே ஆக வேண்டும் என நின்ற ராஜா, பொன்முடி, வேலு போன்ற திமுகவின் மூத்த நிர்வாகிகள் நிலமை பரிதாபமாவதை உணர்ந்து பதற்றத்தில் உள்ளனர்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)