ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம் கூடுதல் அவகாச திட்டம் ! ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம் கூடுதல் அவகாச திட்டம் ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ஜெயலலிதா மரணம் - ஆறுமுகசாமி ஆணையம் கூடுதல் அவகாச திட்டம் !

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் கூடுதல் அவகாசம் கோர திட்ட மிட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது. மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுத ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
ஜெயலலிதா மரணம்


ஜெயலலிதா வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் முன்னதாக டிசம்பர் 24 -ஆம் தேதியில் 

இருந்து 6 மாத காலத்துக்கு அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் ஜூன் 24 -இல் இருந்து  மேலும் 6 மாத காலத்துக்கு விசாரணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என ஆணையம் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப் பட்டது.

இதனை யடுத்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 மாத அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தர விட்டிருந்தது.  இந்நிலையில் அக்.24 - ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் கோர திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. முன்னதாக ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.