ஜெயலலிதா பணிப்பெண்ணின் கேள்வி “கார்டன் நகையில் பங்கு கொடு” ! ஜெயலலிதா பணிப்பெண்ணின் கேள்வி “கார்டன் நகையில் பங்கு கொடு” ! - EThanthi

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ஜெயலலிதா பணிப்பெண்ணின் கேள்வி “கார்டன் நகையில் பங்கு கொடு” !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்தவர் அந்த இளம் பெண். 
ஜெயலலிதா பணிப்பெண்ணின் கேள்வி


‘ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு கார்டனி லிருந்து நகை, பணம் உள்ளிட்ட வற்றை எடுத்து வந்து தன் சொந்த ஊரில் ஆடம்பர பங்களா போன்ற வீட்டைக் கட்டி வருகிறார்’’ என்று அவர் பற்றிப் பேச்சுகள் கிளம்பிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு மிரட்டல் களும் வருகின்றன. 

‘போயஸ் கார்டனில் வேலை பார்த்தவங்க, வீடெல்லாம் கட்டக் கூடாதா?’’ என்று கேட்கிறது அந்தப் பணிப்பெண்ணின் குடும்பம். ஒரத்தநாடு அருகே உள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் -செல்வராணி தம்பதி. இவர்களின் மகள் பூமிகா. சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் மூலம், இவர் 2012-ம் ஆண்டு ஜெயலலிதா வின் போயஸ் கார்டன் இல்லத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

ஜெயலலிதா வுக்கு உணவு தொடங்கி உடை வரையில் அனைத்தையும் எடுத்துத் தருவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். ஜெயலலிதா கண் அசைத்தாலே அவருக்கு இது தான் தேவை என அறிந்து அதைக் கொடுப்பாராம். இதனால் பூமிகாவை, ‘சுட்டிப் பெண்’ என ஜெயலலிதாவே பாராட்டு வாராம்.

ஜெயலலிதா மறைந்து சில நாள்கள் கழித்துத் தன் சொந்த ஊருக்கு வந்து விட்ட பூமிகாவை இப்போது, பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வருகின்றன. இது குறித்து வன்னிப்பட்டு கிராமத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘ஐயப்பனுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இந்தக் குடும்பம் ரொம்பக் கஷ்டத்தில் இருந்தது. அ.தி.மு.க -வின் முக்கியப் புள்ளி ஒருவர் மூலமாக இவர்களின் இளைய மகள் பூமிகா, போயஸ் கார்டனில் வேலைக்குச் சேர்த்து விடப் பட்டார். 

ஜெயலலிதாவு க்கு வேண்டிய அனைத்தையும் பூமிகா தான் செய்து கொடுக்குமாம். ஜெயலலிதா இருந்த வரை, ஒரு முறை கூட பூமிகா ஊருக்கு வந்ததே கிடையாது. அவரின் பெற்றோர் தான் போயஸ் கார்டன் சென்று பூமிகாவைப் பார்த்து விட்டு வருவார்கள். ஜெயலலிதா இறந்த பிறகு பூமிகா, ஊருக்கு வந்து விட்டார். 

ஆரம்பத்தில் எப்பவும் போல் இருந்த அந்தக் குடும்பத்தினர், கொஞ்ச நாள்களு க்குப் பிறகு ஆடம்பரமாக இருக்க ஆரம்பித்தனர். அவர்களின் வீட்டுக்கு அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளின் கார்கள் வரும். போயஸ் கார்டனி லிருந்து விலையு யர்ந்த வைர நகை களையும் ஏராளமான பணத்தையும் அந்தப் பெண் எடுத்து வந்து விட்டதாக வும், அதற்காகத் தான் எல்லோரும் வந்து செல்கிறார்கள் என்றும் பேச்சு கிளம்பியது. 

‘இது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் எழும் வகையில், பிரமாண்ட மாக ஒரு வீடு கட்டத் தொடங்கினார் ஐயப்பன். இதை யெல்லாம் கவனித்த சிலர், பூமிகா குடும்பத்தைக் கண்காணித் ததுடன், அவர்களை மிரட்டிப் பணமும் பறிக்க ஆரம்பித்துள்ளனர். 
கார்டன் நகையில் பங்கு கொடு 


பூமிகாவை கார்டனில் கூட்டிப் போய் வேலைக்குச் சேர்த்து விட்டவர் கூட,

 ‘எனக்கு ஒரு பங்கு கொடுங்க’ என மிரட்டி வேண்டியதை வாங்கிச் சென்று விட்டார்’’ என்றனர்.

இது குறித்து விசாரிக்க பூமிகாவின் வீட்டுக்குச் சென்றோம். அப்போது ஐயப்பன் வீட்டில் இல்லை. 

பூமிகாவின் அம்மா செல்வராணி தயங்கிய படிப் பேச ஆரம்பித்தார். ‘என் பொண்ணை போயஸ் கார்டன்ல வேலைக்குக் கூப்பிட்டப்பவே, ‘வேண்டாம். பூமிகா வாழ்க்கை வீணா போயிடும்’ என மறுத்தேன். ‘அங்க போனா உன் பொண்ணுக்கு மட்டுமல்ல, உங்க குடும்பத்துக்கே நல்ல காலம் தான்’ னு சொல்லிக் கூட்டிட்டுப் போனாங்க. 

அங்க பூமிகா, ஜெயலலிதா அம்மாவுக்கு உதவியா இருந்தா. நாங்க மாசத்துக்கு ரெண்டு முறை போய்ப் பார்த்திட்டு வருவோம்.  ‘என்னைப் பிள்ளை மாதிரி பாசமா பார்த்துக்கு றாங்க ஜெயலலிதா அம்மா’னு பூமிகா சொல்லுவா. போயஸ் கார்டன் வீடு, ராணுவக் கட்டுப் பாட்டோட இருக்கும். காக்கா, குருவி கூட அனுமதி யில்லாம அந்த வீட்டுக்கு மேல பறக்க முடியாது. 

அவ்வளவுப் பாதுகாப்பு. இப்போதும் அந்த வீடு அப்படித்தான் இருக்கு. அங்கு வேலை பார்த்த, அதுவும் 15 வயசே ஆன ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதாக எதையாவது எடுத்துக் கிட்டு வர முடியுமா? இல்லை... அங்கு இருக்கவங்க தான் விட்டுடு வாங்களா? அங்கு வேலை பார்த்ததுக்கு அம்மா சம்பளம் கொடுப்பாங்க. அதில் சேர்த்த பணத்தை வைத்து, கூரை வீட்டி லிருந்து மாடி வீடு கட்டி வாழ ஆசைப் பட்டோம். 

அது பலருக்கும் பொறுக்காம கண்டதைக் கிளப்பி விடுறாங்க. என் பொண்ணு இங்கு வந்த பிறகு, சொல்ல முடியாத கஷ்டங்களை நாங்க அனுபவிச்சுட்டு வர்றோம். அம்மாவைத் தெய்வமாக வணங்கும் எங்களை, அவரின் ஆன்மா இந்தப் பிரச்னையில் இருந்து காப்பாத்தும்’’ என்றார்.

பூமிகாவிடம் பேசினோம். ‘‘திடீரென ஜெயலலிதா அம்மாவுக்கு இதுபோல நடக்கும்னு நினைச்சுக் கூட பார்க்கலை. அவங்க இறந்த பிறகு சின்னம்மா விடம் ‘நான் ஊருக்குப் போறேன்’னு சொன்னேன். அம்மா அப்பாவை வரச்சொல்லி அனுப்பி வைச்சாங்க. எனக்குப் படிக்கணும்னு ஆசையா இருக்கு. 
கார்டன் நகை


அதற்கான முயற்சியில இருக்கேன். கார்டன்ல வேலை பார்த்ததால, தேவை யில்லாத விஷயங்கள் என்னையும் என் குடும்பத்தைச் சுத்துது’’என்றார் சுருக்கமாக. ‘உங்க அப்பா ஐயப்பன் எங்கே?’’ எனக் கேட்டோம். ‘அவர் கூலி வேலைக்குப் போயிருக்கார்’ என்றார். ஊர் முழுக்க அலைந்து திரிந்து, ஒரு வழியாக பூமிகாவின் அப்பா ஐயப்பனைக் கண்டுபிடித்துப் பேசினோம். 

‘‘அப்ப நாங்க எங்க அக்கா ஊரான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள படையல் நகரில் வசித்தோம். என் மக பூமிகா எட்டாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தா. அப்போ, திருமயம் தொகுதி எம்.எல்.ஏ -வாக இருந்த வைர முத்துவின் ஆதரவாளரான கலையரசன், எங்க வீட்டுக்கு வந்தார்.  அது, 2013-ம் வருஷம். என் மகளை கார்டனுக்கு வேலைக்கு அழைச்சார். ‘அவ சின்னவ. எட்டாவது தான் படிக்கிறாள்’னு மறுத்துட்டேன்.

‘அம்மா வீட்டுல வேலைக்குச் சேர்த்துக்கிறதே பெரிய விஷயம். உன் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு’ னு சொல்லிச் சம்மதிக்க வெச்சுட்டார். பூமிகா அங்க சேர்ந்த பிறகு, நாங்கதான் போய்ப் பார்த்துட்டு வருவோம். தன் உதவியாளர் மூலமா ஒரு லட்சம், ரெண்டு லட்சம்னு அம்மா எங்களுக்குப் பணம் கொடுப்பாங்க. 

ஜெயலலிதா அம்மா திடீர்னு இறந்துட்டாங்க. காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு, சின்னம்மாவைப் பார்த்தேன். ‘எழுதிக் கொடுத்துட்டு பொண்ணை அழைச்சுட்டுப் போங்க’ என்றதுடன், கையில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைச்சாங்க. சின்னம்மா கொடுத்த பணம், அதற்கு முன்னாடி நான் ஏழு வருஷம் வெளி நாட்டில் வேலை செய்து சம்பாதிச்ச பணம் என எல்லாத்தை யும் சேர்த்து 45 லட்ச ரூபாய்ல வீடு கட்ட ஆரம்பிச்சேன். 

அதுல எல்லாருக்கும் பொறாமை. ‘உங்க மகள் வைர நகை, பணத்தை யெல்லாம் போயஸ் கார்டன்ல இருந்து எடுத்து வந்துட்டா. எங்களுக்கும் பங்கு கொடு’ன்னு நிறையப் பேர் மிரட்ட ஆரம்பிச்சாங்க. கலையரசன் உள்பட அ.தி.மு.க-வைச் சேர்ந்த பலரும் வீட்டுக்குவந்து விசாரிக்கத் தொடங்கினாங்க. பிரச்னை அதிகமாகவே சில மாதங்கள் தஞ்சாவூர் ஆர்.ஆர்.நகரில் வாடகை வீடு எடுத்துத் தங்கினோம். அப்போ, ஆறு பேர் கொண்ட கும்பல் என்னைக் கொலை செய்ய வந்துச்சு. 

போலீஸார் காப்பாற்றி, ‘இங்கு இருந்தா உன் உயிருக்கு ஆபத்து’ன்னு திரும்பவும் ஊருக்கே அனுப்பி வைச்சாங்க. அப்போதும் பிரச்னை விடாம துரத்துச்சு. ஒரு நாள் இரவு, சுரேஷ்ங்கிறவர் நாலு பேருடன் வீட்டுக்குள்ள புகுந்து என் மக பூமிகாவிடம் அரிவாளைக் காட்டி மிரட்டினாங்க. வீடு கட்ட வைச்சிருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்த பிறகு தான் போனாங்க. அம்மா உயிருடன் இருந்திருந்தா எங்க நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும். அவங்க இல்லாமல் போனதால் நாங்கள் பல வலிகளை அனுபவிக்கிறோம்’’ என்றார்.


‘இந்த மிரட்டல்கள் பற்றி ஏன் போலீஸில் புகார் செய்ய வில்லை? மிரட்டியவர் களுக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?’ என்ற கேள்வி களுக்கு ஐயப்பனிடம் பதில் இல்லை. கிராமத்தினர் சிலர், ‘‘தன் மகள் சொன்ன சில விஷயங் களை, ஐயப்பன் குடிபோதையில் உளறி யுள்ளார். அதிலிருந்து தான் பிரச்னைகள் ஆரம்பமாகி யுள்ளன. திடீரென 45 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவது என்பதும் சந்தேகத்துக் குரியதாகவே பார்க்கப் படுகிறது. 
ஜெயலலிதா பணிப்பெண்
ஜெயலலிதா இறந்த பிறகு தான் பூமிகா வந்துள்ளார். எனவே, கவனமாக விசாரித்தால் பல ரகசியங்கள் அவிழும்’’ என்றனர். போயஸ் கார்டன் ஒரு மர்மக் கோட்டையாகவே ஜெயலலிதா காலத்தில் இருந்தது. இப்போதும் அப்படித் தான் இருக்கிறது!