ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு... ஐகோர்ட்டு நோட்டீஸ் !





ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு... ஐகோர்ட்டு நோட்டீஸ் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.
ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு... ஐகோர்ட்டு நோட்டீஸ் !
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. 

அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப் பட்ட மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதா வுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது. 

இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்கு முறை நிர்வாக ஆணையம் மற்றும் 

சுற்றுச்சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தர விட்டுள்ளார்.
இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 

இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித் துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத் திடமும், மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத் திடமும் ஒப்புதல் பெறவில்லை. 

அனைத்து விதிகளை யும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே 
மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், ஜெயலலிதா வின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. 

இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவை யில்லை’ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார். 

இரு தரப்பு வாதங் களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய,  மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தர விட்டனர். 

விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)