நெய் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், உடலில் கொழுப்பு அதிகரிக்கும், அஜீரணம் ஏற்படும், ஜீரணமாக கால தாமதம் ஆகும் என்று இக்கால இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மூலமாக நெய் மீது குற்றம் சுமத்தப் படுகிறது.
நெய் ஆபத்தானதா?
இது உண்மையா? இதற்கு காரணம் என்ன? இதற்கு ஓரு சரியான தீர்வு சொல்லும் படி ஆயுர்வேத மருத்துவர் பால முருகனிடம் கேட்டோம்.

அடுக்கடுக் காக இப்படி நெய் மீது சுமத்தப்படுகிற குற்றச் சாட்டுகளுக் கான காரணங் களை தெரிந்து கொள்ளும் முன்னர், அதன் மருத்துவ சிறப்பு களை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். 

எத்தனை வகை எண்ணெய் வஸ்துக்கள் இருந்தாலும் அவற்றில் மிகச் சிறந்தது பசு நெய்யே.  அச்சு வெல்லம், 

கருப்பட்டி போன்றவையே அதிக இனிப்புச் சுவை யுடையது சர்க்கரை என்று நாம் நினைக் கிறோம்.

ஆனால், இவை அனைத்தையும் விட இவ்வுல கிலேயே மிகச் சிறந்த இனிப்புச் சுவை யுடையது பசு நெய். ஆயுர்வேத மருத்துவ த்தில் பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் என்று குறிப்பிடுவது இந்த பசு நெய்யைத் தான். 

பசு நெய் எந்தப் பொருளுடன் சேர்கிறதோ, அப்பொருளின் சுவை மற்றும் செயல்படும் திறனை அதிகரிக்கும் தன்மை யுடையது.  

கொடுக்கப்படுகிற உணவு அல்லது மருந்தினை நெய்யுடன் கலந்து கொடுக்கும் போது, அது மிக விரைவாக மூளையைச் சென்றடை கிறது. 

இதன் மூலம் சிந்தனைத் திறன், புத்திக் கூர்மை, ஞாபகசக்தி போன்ற வற்றை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது உடலில் வனப்பை உண்டாக்கு கிறது. 

உடல் பித்தத்தைக் குறைப்ப தற்கு இந்த உலகில் உள்ள மிகச் சிறந்த பொருள் பசு நெய்தான்.

காலை, மதியம், மாலை மற்றும் இரவு போன்ற நேரங் களில் மதிய நேரமே உடலில் பித்தம் அதிகரித்து இருக்கும் என்பதால்,  மதிய உணவில் முறையாக தயாரிக்கப் பட்ட பசு நெய்யை சேர்த்துக் கொள்வது நல்லது. 
நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள் !
அது நஞ்சை முறிக்க, கண் பார்வைத் திறன் அதிகரிக்க பெரிதும் உதவுவதோடு விந்தணுக்கள் அதிகரிப் பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

இப்படி பல்வேறு மருத்துவ சிறப்புகளை உடைய நெய் மீது குற்றம் சுமத்தப் படுவதற் கான காரணங் களை நாம் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள், இளைஞர்கள், முதிய வர்கள் என்று அனை வருக்கும் உகந்த பசு நெய்யை கீழ்க்கண்ட முறையில் தயாரித்தால் தான் மேற்கண்ட பலன்களை நாம் பெற முடியும்.

பசு மாட்டுக்கு இயற்கை முறை உணவுகளான புல், தாவரங்கள், மரங்களின் இலைதழைகள் மற்றும் புண்ணாக்கு, வைக்கோல், கஞ்சி போன்ற வற்றையே கொடுக்க வேண்டும். 

இது போன்ற நம் பாரம்பரிய முறையில் வளர்கிற பசுவிட மிருந்து கிடைத்த பாலை தயிராக மாற்ற வேண்டும். தயிர் சரியான பக்குவம் அடைந்த வுடன் அதை முறை யாகக் கடைந்து,

அதிலி ருந்து வெண்ணெய் எடுத்த பின்பு அந்த வெண்ணெயை உருக்கி நெய்யாக்க வேண்டும். 

இப்படி தயாரிக்கப் பட்ட பசு நெய்யின் சுவை, நிறம், திடம் மற்றும் பயன்படுத் தப்படும் அளவு போன்ற எந்த காரணத்தி ற்காகவும் அதில் எவ்வித மாறுதல் களையும் செய்யக் கூடாது.

அதுவே சுத்தமான நெய்யாக வும் இருக்கும். கலப்பின பசுக்களிட மிருந்து கிடைத்த பால் அல்லது மாட்டுக்கு முறையான உணவுப் பொருட்கள் கொடுக்காமல் கிடைத்த பாலில் பல்வேறு வேதிப் பொருட்கள் கலந்து,

அது தயிர் தானா என்கிற அளவுக்கு தயிராக்கி அதிலிருந்து தயார் செய்யப் படுகிற நெய் சுத்தமான தாகவும்,  

மேலே சொன்ன உடல் ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கிய தாகவும் இருக்க வாய்ப்பே இல்லை’’ என்ற வரிடம் நெய்யை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கேட்டோம்…
Ghee dangerous
‘நெய் பயன் படுத்தும் போது உணவு சூடாக இருக்க வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் நெய் பயன் படுத்துதல் சரியான தல்ல.

ஆனால், நாம் காலையில் நெய் கலந்த பொங்கல், தோசை என்றும் மாலை நெய் சார்ந்த இனிப்பு, பலகாரம் என்றும் இரவில் நெய் ரோஸ்ட் என்றும் சாப்பிடு கிறோம்.

இவை எல்லாம் முற்றிலும் தவறான உணவுப் பழக்க வழக்க முறை என்பதை நாம் புரிந்து கொள்வதோடு, சரியான உணவுப் பழக்க வழக்க முறைகளை அறிந்து, அதை பின் பற்றுவதே நமது உடல் ஆரோக்கிய த்திற்கு உகந்தது. 

நெய்யை அதிகமாக விரும்பி சாப்பிடு வோர்க்கு நல்ல ஜீரண சக்தி இருக்க வேண்டும். இதனால் ஜீரண சக்தி குறைவாக இருப்ப வர்கள் அதை தவிர்க்க வேண்டும்.

பசு நெய்யை தகுதியா னவர்கள், தகுதி யான நேரத்தில், சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் ஏற்படாது. 

உடலில் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும் என்பதே நிதர்சன மான உண்மை.

அதனால், பாரம்பரிய உணவுகள் மேல் குற்றம் சொல்லா தீர்கள்.அவை யாவும் என்றை க்கும் நம் உடலுக்கு நன்மை அளிப்பவையே.

நெய் உற்பத்தி செய்வது, அவரவர் உடல்நிலை அறிந்து உண்பது, எந்தெந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து விஷயங் களிலும் தவறு செய்வது நாம் தான். 
நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள் !
இப்படி அதை தயாரிப்ப திலும் பயன்படுத்து வதிலும் பல்வேறு முரண் பாடுகள் நம்மிடையே நிலவி வருகிறது.

முள்ளின் மீது நாம் போய் மிதித்து விட்டு, முள் குத்தி விட்டது என்று அதன் மீது குற்றம் சுமத்திப் பேசுவது போலவே, தற்போது நெய்யின் மீதும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. 

ஆனால், அதை சரியான முறையில் தயாரித்து, சரியாக பயன் படுத்தாத நம் மேல் தான் தவறு.

நெய்யின் மேல் எந்தத் தவறும் இல்லை’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன். நெய்யில் உள்ள ஊட்டச் சத்துக்கள், 

அதன் பயன்கள் பற்றிய முக்கிய மான 10 தகவல் களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி.
நெய் ஆபத்தானதா?
1 . நெய்யில் Medium Chain Fatty Acid அதிகம் உள்ளது. இதை நம் உடலிலுள்ள ஈரல் நேரடியாக எடுத்துக் கொண்டு நமக்குத் தேவை யான ஆற்றலைக் கொடுக்கிறது. 

இதனால் அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டு வீரர்களு க்கு இது மிகவும் உகந்தது.

2 . இதில் நீரில் கரையும் வைட்டமின் களான A மற்றும் E உள்ளது. வைட்டமின் A கண்களு க்கு இன்றியமை யாதது. வைட்டமின் E உடலிலுள்ள இனப்பெருக்க மண்டலம் நன்றாக செயல்பட உதவுகிறது.

3 . இதில் வைட்டமின் K 2 மற்றும் Conjugated Linoleic Acid (CLA) என்கிற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. புல் மட்டுமே சாப்பிடும் மாட்டி னுடைய பாலில் இச்சத்து அதிகம் உள்ளது. இது அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளடக்கியது.

4 . நெய் உடலில் பசியைத் தூண்டு கிறது.

5 . இதிலுள்ள Butyric Acid உடல் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவு கிறது.

6 . இது குடலில் ஏற்படக் கூடிய புண்கள், வீக்கம் மற்றும் புற்று நோய்களு க்கு எதிராகவும் செயல்படுகிறது.

7 . இதில் உள்ள Omega 3 Fatty acid, Omega 6 Fatty acid போன்றவை தாயின் கருவி லுள்ள குழந்தை யின் மூளை வளர்ச்சிக்கு உதவு கிறது.
8 . சில குழந்தை களுக்கு Lactose intolerance அல்லது Casein intolerance பிரச்னை இருக்கும். இப்பிரச்னை யுடைய குழந்தை யின் உடல் இச்சத்து க்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும்.

இதனால் அவர்களால் பால் சாப்பிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தை களுக்கு நெய் சாப்பிட கொடுக்க லாம்.

9 . மற்ற எண்ணெய் வகைகளை சூடாக்கும் போது அதிக வெப்ப நிலையில் அதன் தன்மை மாறி உடல் நலனுக்கு ஒவ்வாத தாக மாறுகிறது. 
உடலில் பசியைத் தூண்டுகிறது
ஆனால் நெய்யை 250 டிகிரி செல்சியஸ் அல்லது 482 ஃபாரன் ஹீட்டுக்கு மேல் சூடாக்கி னாலும் அதன் தன்மையும் மாறாது, கெட்டும் போகாது. 

10 . நெய்யை எந்தவித குளிர் பதன பெட்டிகளி லும் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசிய மில்லை. 

அதை எல்லா விதமான வெளிப்புற வெப்ப நிலையிலும், சாதாரண மாக ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் பாதுகாத்து வைத்து ஆண்டுக் கணக்கில் பயன் படுத்தவும் முடியும், அதன் பயன் களையும் முழுமை யாகப் பெற முடியும்.